பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 829

தில்லைவாழந்தணர், பொய்யடிமையில்லாத புலவர், பத்தசாய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆகிய ஒன்பது திருக்கூட்டத்தாரையும், திருநீலகண்டக் குயவளுர் முதல் திருநீலகண்டத்துப்பாணஞர் ஈருகவுள்ள தனியடியார்கள் அறுபதின்மரையும் பெயர்கூறி வழிபடும் நிலையில் அவர்க்கெல்லாம் தனித்தனியே அடியேன் அடியேன் எனக்கூறி நம்பியாரூரர் பரவிப் போற்றி யுள்ளார். சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் பதினெரு திருப்பாடல்களையுடையதாகும். இதன் இறுதிப் பாடலாகிய பதினுெராம் திருப்பாடலில், என்னவனும் அரனடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திருநாவலூர்க்கோன் அன்னவளும் ஆரூரன் என நம்பியாரூரர், தம்மையும், தம் தந்தை சடையனர், தாய் இசை ஞானியார் ஆகிய தம்பெற்றேர் களையும் குறித்துள்ளார். ஆகவே திருத்தொண்டத் தொகையில் அடியேன் என வணக்கச் சொல்லொடு புணர்த்துப் போற்றப் பெறும் சிவனடியார்கள் அறுபதின் மராயினும், அப்பதிகத்தை அருளிச் செய்த நம்பியாரூரர், அவர் தந்தையார் சடையனுர், தாயார் இசை ஞானியார் என அப்பதிகத்தால் அறியப்படும் மூவரையும் சேர்த்து எண்ணித் தனியடியார் அறுபத்து மூவர் என அழைக்கும் வழக்கம் சுந்தரர் காலத்திற்குப் பின் தோன்றி நிலை பெறுவதாயிற்று.

நம்பியாரூரர் வாழ்ந்த காலப்பகுதியாகிய கி. பி. எட்டாம் நூற்ருண்டிலும் அதற்குமுன் பல்வேறு காலங் களிலும் தோன்றிச் சிவனடி மறவாச் சிந்தையராய் உலகம் உய்ய நற்பணி புரிந்த திருவருட் செல்வர்களாகிய சிவனடியார்களின் திருப்பெயர்களை எடுத்தோதிப் போற்றும் வாயிலாகத் தமிழகம் உய்யப் பல வேறு திருப்பணிகளைப் புரிந்த அப் பெருந்தகையார்களின் வரலாறுகளைப் பின்னுள்ளோர் உணர்தற்குச் சாதனமாக அமைந்தது நம்பியாரூரர் அருளிய இத்திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகமேயாகும். தமிழக வரலாற்றிற் சிறப்பாக இடம் பெறத்தக்க திருவருட் செல்வர்களின்