பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 பன்னிரு திருமுறை வரலாறு

வரலாறுகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்த இத் திருப்பதிகத்தின, தென்றமிழ்ப் பயனுய் வந்த திருத் தொண்டத்தொகை எனவும், மூலமான திருத்தொண்டத் தொகை' எனவும், இதனைத் திருவாய் மலர்ந்தருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன்பணித்த திருவாளன்' எனவும் சேக்கிழாரடிகள் உளமுவந்து போற்றியுள்ளார்.

இத்திருத்தொண்டத் தொகைப் பொருளை வகுத்து விளக்கும் முறையில் அமைந்தது, நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியாகும். திருத் தொண்டத் தொகையிற் போற்றப் பெற்றுள்ள சிவனடி யார்களின் வரலாறுகளைத் திருநாரையூரிற் கோயில் கொண்டருளும் பொல்லாப்பிள்ளையார் அருளால் உணர்ந்து தெளிந்த நம்பியாண்டார் நம்பிகள், திருத் தொண்டர்கள் பிறந்த ஊர், நாடு, மரபு, அருஞ்செயல் ஆகிய வரலாற்றுக் குறிப்புக்களை வகுத்துரைக்கும் முறையில் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலைச் செய்தருளினர் என்பது வரலாறு.

நூலமைக்கும் முறை நால் வகைப்படும். அவை யாவன விரிந்து பரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்றை வகைப் படுத்து விளக்குவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்றை விரித்து விளக்குவதும், பிறமொழி நூல்களை அடியொற்றி மொழிபெயர்த்துரைப்பதும் ஆகும். அவற்றுள் நம்பியாருரர் அருளிய திருத்தொண்டத் தொகை அடியார் திருப்பெயர் களைத் தொகுத்துரைப்பதாதலின் தொகை நூல் எனப் படும். அத்தொகையிற் போற்றப் பெற்ற அடியார்களின் வரலாறுகளே வகைப்படுத்துரைப்பது நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியாகும். இது வகைநூல் எனப்படும். நந்தம் நாதனும் நம்பியாண்டார் நம்பி, புந்தியாரப் புகன்ற வகையில்ை (பெரிய-திருமலைச் -39) எனச் சேக்கிழாரடிகள் இத்திருவந்தாதியை வகை யெனக் குறித்துள்ளமை இப்பெயர் வழக்கினை வற்புறுத் துதல் காண்க. மேற்குறித்த திருத்தொண்டத் தொகை யையும் அதன் வகையாக அமைந்த திருத்தொண்டர் திருவந்தாதியையும் ஆதரவாகக் கொண்டு, அடியார்களின்