பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 8ష్ట్రిడ్జ్

மானைப் பித்தா பிறைசூடி எனப் பெரிதாம் திருப்பதி கத்தாற் பாடிப் போற்றினர் ; பல தலங்களே வணங்கித் திருவாரூரை அடைந்து தம்பிரான் தோழரானுர் , கமலினி யாராகிய பரவையாரை தற்பெரும் பான்மை கூட்டக்கண்டு காதல் கொண்டு இறைவன் அருளால் திருமணம் செய்து கொண்டார். பரவையார் கேள்வராகிய சுந்தரர், திருவா ரூர்த் திருக்கோயிலின் திருமுற்றத்திலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அடியார் திருக்கூட்டத் தினை நோக்கி அன்பு நீங்கா அச்சமுடையராய், இவர்க்கு யான் அடியாளுகப் பண்ணும் நாள் எந்நாள் ?’ என்று பரமர் தாள் பரவித் திருக்கோயிலினுள்ளே சென்ருர். புற்றிடங்கொண்ட பெருமாளுகிய இறைவன், நம்பியா ரூரர்க்கு எதிரே தோன்றி அடியார் பெருமையினை எடுத் துரைத்துத் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடி யேன் என அடியெடுத்துக் கொடுத்தருளினுர், சிவனருள் பெற்ற திருவாளராகிய நம்பியாரூரரும் அத்தொடரினை முதலாகக்கொண்டு, நேசம் திறைந்த உள் ளத்தால் ஈசனடியார் பெருமையினை எல்லாவுவிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகையினைப் பாடிப் போற்றிஞர். இச் சிறப்புடைய நிகழ்ச்சியினைக் காப்பியச் சுவை நலம் பொருந்த விரித்துக் கூறுவது, இந்நூலின் முதற்கண் திருமலைச் சிறப்பு முதல் தடுத்தாட் கொண்ட புராணம் வரை அமைந்த பகுதியாகும்.

இதனையடுத்துத் திருத்தொண்டத் தொகையின் பதிளுெரு பாடல்களிலும் போற்றப் பெற்றுள்ள தில்லைவா ழந்தனர், திருநீலகண்டக் குயவளுர் முதல் திருநீல கண்டப் பானர் ஈருகவுள்ள அடியார்களின் வரலாறுகள், அவ்வத் திருப்பாடற்குரிய முதற் குறிப்பினையே பெயராகக் கொண்டு, தில்லைவாழந்தணர் சருக்கம் முதல் மன்னிய சீர்ச் சருக்கம் ஈருகப் பதினுெரு சருக்கங்களில் வகுத் துரைக்கப்பெற்றன.

சேரமான் தோழராகிய கந்தரர், சேரநாட்டுத் தலை நகராகிய கொடுங்கோளுரில் திருவஞ்சைக்களத் திருக் கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் பாடிப் பரவி யிருக்கும் நிலையில், கயிலைப் பெருமாளுல் அனுப்பப்பெற்று அங்கு வந்த வென்னே யானையின் மீதமர்ந்து, தம் தோழ