பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 பன்னிரு திருமுறை வரலாறு

ராகிய சேரமான் பெருமாள் பரிமீதமர்ந்து உடன் வரத் திருக்கயிலாயத்தை அடைந்து அம்மையப்பரைக் கண்டு வழிபட்டுத் தம் தோழர் சேரமான் பாடிய திருக்கயிலாய ஞான வுலா இறைவன் திருமுன்னர் அரங்கேறக் கேட்டு மகிழ்ந்து முன்புபோல் தத்தமக்குரிய அணுக்கத் திருத் தொண்டினையேற்று இன்புற்ற செய்தியை விரித்துரைக்கும் பகுதி வெள்ளானைச் சருக்கம் என்பதாகும்.

நூலின் முடிபொருளாக அமைந்த இந்நிகழ்ச்சி யினையே முதலாகக்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் இக் காப்பியத்தைத் தொடங்கியுள்ளமை கூர்ந்து நோக்கத் தகுவதாகும்.

திருமலைச் சிறப்பு

பொன்னின்மேல் வெண் திருநீறு புனைந்தாற் போன்று நீண்ட பனிமலையாகிய இமயமலையின் உச்சியில் விளங்குவது திருக்கயிலாயமலை. அத் திருமலையானது, தன்னை இன்னதன்மையன் என யாவராலும் உணர்தற் கரிய சிவபெருமான் என்றும் அகலாது எழுந்தருளி யிருக்கும் தனிச் சிறப்புடையது ; உலக மக்கள் செய்த புண்ணியங்கள் யாவும் ஒருங்கு திரண்டாற் போன்று பொலிவுபெற்று விளங்குவது ; தேவர் முனிவர் யாவரும் மலர் தூவி வணங்கி வழிபடும் மேன்மையுடையது ; உலக நிலைகளையே மாற்றவல்ல சிவ கணங்களாகிய கோடி கோடி குறட்சிறு பூதங்கள் இறைவன் புகழைப் பாடியாடும் இடப்பரப்பினை யுடையது. அத்தகைய திருக் கயிலாய மலையின் தாழ்வரையின் கண்ணே சிவனடியே சிந்திக்கும் சிவஞானச் செல்வரும் கண்ணனுக்குச் சிவ தீக்கை செய்தருளியவரும் பாலணுகிய பருவத்தே திருப்பாற் கடலைப் பருகி வளர்ந்தவரும் ஆகிய உபமன்னிய முனிவர், பத்திமையிற் சிறந்த பல்லாயிரம் முனிவர்களும் சுத்தயோகி களும் சூழ எழுந்தருளியிருக்கின் ருர், அப்பொழுது ஆயிரம் சூரியர்கள் ஒருங்கு தோன்றினுற் போன்ற பேரொளிப் பிழம்பு தென் திசையிலே தோன்றியது. அதனைக் கண் ணுற்ற முனிவர் முதலியோர் இங்கு இது என்ன அதிச யம் ? என உபமன்னிய முனிவரை நோக்கி வினவிஞர்கள். உபமன்னிய முனிவர் பிறையணி வார் சடையான் திருவடி களைச் சிந்தித்து, மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திட்த்