பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/854

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 பன்னிரு திருமுறை வரலாறு

என்று மாமுனி வன்ருெண்டர் செய்கையை

அன்று சொன்ன படியால் அடியவர்

துன்று சீர்த்திருத் தொண்டத் தொகை விரி

இன்றே னு தர வாலிங் கியம்புகேன் (திருமலைச் சிறப்பு 37) என ஆசிரியர் தம் காப்பியத்திற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளுதலால் இனிது விளங்கும் நப பியர்ரூசர் திருப் பாடலில் மந்திரம முனிவர்' என வரும் குறிப்பு உப மன்னிய முனிவரையே குறித்ததாகச் சேக்கிழாரடிகள் கரு திர்ை என்பது, இப் பாடலில் மாமுனி என அதே தொடரால் உபமன்னிய முனிவரைக் குறித்துள்ளமையால் இனிது புலனும்,

நாட்டுச் சிறப்பு ரு *

காப்பியம் இயற்றும் ஆசிரியர்கள் தாம் இயற்றும் காப்பியத்தின் தொடக்கத்திலேயே அக்காப்பியத் தலைவர்க் குரிய நாட்டைப் பற்றியும் அவர் பிறந்த நகரத்தைப் பற்றியும் விரித்துரைப்பது இயல்பு. திருத்தொண்டர் புராணமாகிய இக்காப்பியத்தின் பாட்டுடைத் தலைவராவார் நம்பியாரூரராவர். அவர் அவதரித்தருளிய நாடு திருமுனைப்பாடி நாடு ஊர் அந்த நாட்டின் தலைநகர மாகிய திரு நாவலூர், ஆகவே இக்காட்பியத்தில் முதற் கண் சிறப்பித்துரைக்கத்தக்கன திருமுனைப்பாடி நாடும் திருநாவலூருமே என்பது தெளிவு. எனினும் சேக்கிழா ாடிகள் தம்காப்பியத்துக்குச் சிறப்புரிமையுடைய நாடாகச் சோழ நாட்டையும் சிறந்த பேரூராகத் திருவாரூரையும் கொண்டுள்ளார். இவ்வாறு இக்காப்பியத்திற் சோழ நாடும் அந்நாட்டுப் பேரூர்களில் திருவாரூரும் சிறப்பிடம் பெறுதற்குரிய காரணம், திருத்தொண்டத் தொகை விரியாகிய இக்காப்பியத்தாற் போற்றப் பெறும் சிவனடி யார்களது திருக்கூட்டம் நிறைந்து விளங்கும் சிறப் புடையது புனல் நாடாகிய சோழ நாடாகவும், சிவ பெருமான் தன்னடியார்களுக்கு என்றும் எளிவரும் பெருமையுடைய பழம்பதி திருவாரூராகவும் அமைந் துள்ளமையே என்பதனை,

உலக முய்யவும் சைவ நின் ருேங்கவும் அலகில் சீர் நம்பியாரூரர் பாடிய நிலவு தொண்டர் தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்'