பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 器蛙

எனத் திருமலைச் சிறப்பின் இறுதியில் தோற்றுவாய் செய்து கொள்ளுதலாலும், இவ்வாறே திருநாட்டுச் சிறப்பினையடுத்து,

சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது மன்னு மாமல சான் வழி பட்டது வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச் சென்னி யார்திரு வாரூர்த் திருநகர் ’

எனத்திருநகரச் சிறப்பினைத் தொடங்குதலாலும் சேக்கிழா ரடிகள் இனிது புலப்படுத்தியுள்ளார்,

தமிழ்நாடு அயல்வேந்தர் ஆட்சியுட்பட்டமையால் தமிழ்மொழியும் தமிழ் மக்களது தெய்வ வழிபாட்டு நெறி முறையும் சிதைவுறும் நிலையினை எய்திய அல்லற் காலத் திலும் தமிழகத்தின் நெஞ்சத் தாமரையாக விளங்கிய இச்சோழ நாட்டில் தமிழ் மொழியும் தமிழர்க்குச் சிறப்புரிமையுடைய சிவநெறியும் தளர்வுருது பேணப்பட்டு வந்தமையால் தமிழகத்திற் பல் வேறுார்களிலிருந்தும் வந்த சிவநெறிச் செல்வர் பலர் இந்நாட்டில் விரும்பித் தங்கியிருந்தார்கள், இச்செய்தி திருத்தொண்டர் புராணத் தில் இடம் பெற்றுள்ள வரலாற்று நிகழ்ச்சிகளாலும் அக் காலத்தில் சோழ நாட்டில் வாழ்ந்த காரைக்காலம் மைக:ார் திருமூலர் முதலிய அருளாசிரியர்கள் அருளிய திருமுறை களாலும் இனிதுணரப்படும். இவ்வாறு செந்தமிழும் சிவ நெறியும் வளம்பெற்று வளர்தற்குரிய நிலைக் களமாகச் சோழநாடு திகழ்ந்தமை பற்றி இந்நாடு செந்தமிழ் நிலம்' எனப் பிற்காலவுரையாசிரியர்களாற் போற்றப் பெறும் பெருஞ் சிறப்பினையும் எய்துவதாயிற்று. இவ்வுண்மை, "செந்தமிழ் நிலம் என்பது வையை யாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு " (தொல் - எச்ச - ஆ. . 2) எனவரும் இளம் பூரணர் உரையாலும், !

" மன்றவாணன் மலர்திரு வருளாற்

றென்றமிழ் மகிமை சிவனிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியின் மாப் பெருமை பரவுறு சோழனும் சைவமாத வரும் தழைத்தினிதிருக்கும் மையறு சோழ வள நாடென்: '