பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 பன்னிரு திருமுறை வரலாறு

என யாப்பருங்கலக்காரிக்ையுரையாசிரியர் காட்டும் மேற் கோட் செய்யுளாலும் நன்கு புலணுதல் காணலாம்.

புனல் நாடாகிய சோழ நாட்டின் சிறப்பினை விரித்துரைக்கப் போந்த ஆசிரியர் சேக்கிழார், அந் நாட்டினைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதாய் முடிகெழு வேந்தராகிய தமிழ் வேந்தர் மூவர்க்கும் உரியதாய்த் திகழும் தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிட்டு, அவ்வெல்லைக்கு மேலாக வடவிமயம் வரை சென்று அம்மலையிற் புலியிலச்சினையைப் பொறித்த பெருவிறல் படைத்த சோழ மன்னருக்குச் சிறப்புரிமையுடைய சென்னி தன்னுட்டினையும், அந்நாடு வளம் பெறுவதற்குக் காரண மாயமைந்த காவிரித்தாயாகிய பொன்னிநதியின் சிறப் பினையும், அந்நன்னீரால் உளவாகிய நாட்டு வளம், குடிச்சிறப்பு. கூழின் பெருக்கம், தெய்வ வழிபாடு ஆகிய சிறப்புக்களையும், அவற்றுக்குக் காரணமாயமைந்த சோழ மன்னனது அறநெறியில் இயன்ற ஆட்சித்திறத்தினையும் விளக்கும் முறையில் திருநாட்டுச் சிறப்பு என்ற பகுதியை அமைத்துள்ளார்.

பாட்டியற் றமிழுகரை பயின்ற வெல்லேயுட் கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற் சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்

என ஆசிரியர் சேக்கிழாரடிகள், தாம் இயற்ற எண்ணிய காப்பியத்திற்குரிய நாட்டின் எல்லையினை நன்கு வரையறுத்துரைப்பது, நாடாள் வேந்தர்க்கு அமைச்ச ராய் விளங்கிய அவ்வாசிரியரது அரசியல் நெறி முறையுடன் இயைந்த வரலாற்றுணர்ச்சியினை நன்கு புலப்படுத்துதல் காணலாம். தமிழ் நாட்டின் எல்லை இதுவென விளக்க முற்பட்ட சேக்கிழாரடிகள், வட வேங்கடம் தென் குமரி ' எனப்படும் அவ்எல்லே, சங்கச் செய்யுட்களாகிய பழம் பாட்டிலும், இயற்றமிழ் இலக்கண மாகிய தொல்காப்பியம் முதலிய தொன்னுரல்களிலும், அவற்றுக்கு அமைந்த பழைய உரைகளிலும் வரன் முறையே பயின்று வந்த தொன்மையுடையது என்பார்,

" பாட்டு, இயற்றமிழ், உரை, பயின்ற எல்லே ' எனத் தெளிவாகக்குறித்தார். மேற் குறித்த செந்தமிழ் நாட்டின்