பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 露蘇鄒

எல்லையுட்பட்ட காவிரிநாட்டின் இயல்பினையே இங்குச் சொல்லத் தொடங்குகின்றேன் என துதலிப்புகும் ஆசிரியர், அந்நாட்டினையாளும் சோழமன்னரது வெற்றித் திறத்தினை விளக்கும் முறையில் கோட்டுயர்பனிவரைக் குன்றின் உச்சியில், சூட்டிய வளர்புலிச் சோழர் எனச் சிறப்பித்தார். பண்டைச் சோழ மன்னர்களிற் கரிகாற் பெருவளத்தான் வடநாட்டின்மேற் படையெடுக்கச் ': متمم o து. த சென்று வடவேந்தர்களைப் புறங்கண்டு இமயமலையின் மேல் தனது புலிக்கொடியாகிய இலச்சினையைப் பொறித்த செய்தியினை,

இருநில மருங்கிற் பொருநரைப் பெரு அச் செரு வெங்காதலிற் றிருமா வளவன் வசளுங் குடையு ம்யிர்க்கண் முரசு நானொடு பெயர்த்து நண்ணுர்ப் பேறுக விம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண் ணிய திசைமுகம் போகிய வந் நாள் அசைவி லூக்கத்து தசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலேயென இமையவ ருறையுஞ் சிமையப் பிடர்த்தலேக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர் வோ ற்கு ”

(சிலப் - இந்திர - 89 - 98)

எனவும்,

"பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணுண்டான்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்'

(சிலப் - கானல்வரி உள்வரி வாழ்த்து - 2) எனவும் வரும் தொடர்களில் இளங்கோவடிகள் தெளி வாகக் குறித்துள்ளார். சோழன் கரிகாலனைப் பற்றிய தொன்மை வரலாற்றை யுளங்கொண்ட சேக்கிழாரடிகள்,

" இலங்கு வேற் கரிகாற் பெரு வளத்தோன்

வன்றிறற் புலி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் " (திருக்குறிப்புத் - 85) எனவும்.

  • புண்டரிகம் பொன்வரைமேல் ஏற்றிப் புவியளிக்கும்

தண்டரள வெண் கவிகைத் தார் வளவர் சோளுட்டில்"

(ஏளுதி - 1) எனவும் வரும் தொடர்களிற் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்குரியதாகும்.