பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链懿 பன்னிரு திருமுறை வரலாறு

சூரபன்மன் முதலிய அவுனர்களுக்கு அஞ்சிச் சீர்காழியை யடைந்து இறைவனை வழிபட்டிருக்கும் இந்திரன், தான் இறைவனுக்கென வைத்த நந்தவனம் நீரின்றி வாடியதஞல் விநாயகப் பெருமானைக் குறை யிரந்து வேண்டினன். அப்பொழுது அகத்தி முனிவர் தம் கமண்டலத்திலே ஆகாய கங்கையைக்கொண்டு தென்றிசை நோக்கிப் போந்தவர் சையமலையில் தங்கினர் அந் நிலையில், விநாயகர் காகவுருக் கொண்டு அவருடைய கமண்டலத்தைக் கவிழ்க்க, அதன் நீர் காவிரியாருகப் பரந்து ஓடிச் சோழ நாட்டிற் புகுந்து இந்திரனது நந்த வனத்தைச் செழிக்கச் செய்தது எனக் கந்தபுராணம் கூறும், காந்தன் என்னும் சோழ மன்னனது வேண்டு கோளுக்கிரங்கிய அகத்திய முனிவர், தமது கமண்டலத் திலுள்ள நன்னீரைக் காவிரியாருக நிலத்திற் பெருகச் செய்தார் என மணிமேகலைப் பதிகம் கூறும். செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட் அமர முனிவன் அகத்தியன்றனது கசகங் கவிழ்த்த காவிரிப்பாவை ? (9 - 12) என்பது மணிமேகப்ே பதிகமாகும். இங்ங்ணம் அகத்திய முனிவரது கமண்டலத்திலுள்ள நீரே காவிரியாருகப் பெருக்கெடுத்தது என்ற பழங்கதையினை புளங்கொண்ட சேக்கிழாரடிகள், அப்பேராறு நிலத்திற் பரவி யோடிய நிலையில் நிலமடந்தையின் மார்பில் அணியப் பெற்ற அழகிய முத்துமாலேயினை பொத்து வி ன ங் கி ய தோற்றத்தை,

ஆதிமா தவமுனி யகத்தியன்தரு பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி மாதர்மண் மடந்தையொன் மார்பிற் ருழ்ந்ததோர் ஒதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால் (பெரிய - திருநாட்டு-2) எனவரும் பாடலில் அழகாகப் புனைந்துரைக்கின்ருர், இச்செய்யுளின் பின்னிரண்டடிகள்,

' மணிமலைப் பனைத் தோள் மாநில மடந்தை

அணிமலைத் துயல் வரும் ஆரம் போலச் செல்புனலுழந்த சேய்வரந் கான்யாற்று ” (சிறுபாண் 1-3) எனவரும் சிறுபாணுற்றுப்படைத் தொடரை அடியொற்றி அமைந்துள்ளமை காண்க