பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్షీరీ பன்னிரு திருமுறை வரலாறு

தான் பொய்யாத வளமுடையதாய், மன்னுயிர்களைப் புரக்கும் பொன்னி நதியினை தம் முன்ளுேர் தெய்வத் தன்மை வாய்ந்த திருநதியாகப் பரவிப் போற்றி யுள்ளார்கள் என்பது,

  • தெய்வக்காவிரித் தீது தீர் சிறப்பும் '

(சிலப் - நாடுகாண் - கட்டுரை - 8) எனவரும் இளங்கோவடிகள் வாய் மொழியாலும்,

' வருதாவெ ன்றும் பிழையாத் தெய்வப்பொன்னி "

(பெரிய - மங்கை - 8) எனவரும் சேக்கிழாரடிகள் வாய் மொழியாலும் நன்கு புலனும்.

  • சையமால் வரை பயில் தலைமை சான்றது செய்யபூ மகட்கு நற் செவிலிபோன்றது ; வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும் உய்யவே சுரந்தளித் துட்டு நீரது ' (திருநாட்டுப் - 3) எனக் காவிரியன்னை யைச் சேக்கிழார் டிகள் சிறப்பித் துள்ளார். இவ்வாறே சேர முனிவராகிய இளங்கோவடி களும்,
  • வாழியவன்றன் வள நாடு மகவாய், வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி '

(சிலப் கானல்வரி -) எனக் காவிரியை நிலமடந்தைக்குச் செவிலித் தாயாகக் கொண்டு போற்றியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.

காவிரியாறு நான் முகனையும் கங்கையையும் ஒக்கும் எனச் சிலேடையுவமையாற் செப்பிய சேக்கிழார், அத்தெய்வ நதியின் ஒழுக்கத்திற்கு, வண்ண நீள் வரை தர வந்து எண்ணில் பேரறங்களும் வளர்க்கும் உமையம்மையாரின் கருணையின் ஒழுக்கினை உவமை கூறிவிளக்கும் முறையில் அமைந்தது,

" வண்ண நீள் வரை தர வத்த மேன்மையால்

எண்ணில் பேரறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல் பாகத்தை யாளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது”

(திரு நாட்டுச் - 5) எனவரும் செய்யுளாகும். குளிர்ந்த நன்னீரையுடைய காவிரியாறு, நறுமணம் பொருந்திய மலர்களையும்