பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 பன்னிரு திருமுறை வரலாறு

எனவரும் வரிப்பாடலில் இளங்கோவடிகள் குறித்துள்ளார் இவ்வரிப் பாடலையுளங் கொண்ட சேக்கிழாரடிகள்,

ஒண்டு றைத்தலை மாமத கூடுபோய் மண்டு நீள் வயலிற்புக வந் தெதிர் கொண்ட மள்ளர் குரைத்த கையோசை போய் அண்டர் வானத்தின் அப்புறஞ்சாருமால் ' (திரு நாட்டுச்-10) எனக் காவிரிப் புதுப்புனல் வருகையினை எதிர் கொண்ட உழவரது ஆரவாரத்தைச் சிறப்பித்துரைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

சோழ நாட்டின் சிறப்பினை விரித்துரைக் கத் தொடங்கிய அருண்மொழித்தேவர், அந்நாட்டினை வனர்க்குந் தாயாகிய காவிரியின் இயல்பினை இப் படலத்தின் முதற்பத்துப் பாடல்களிற் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

இனி, பொன்னி நன்னிரால் நற்பயன் விளக்கும் உழவர்களின் தொழில் முயற்சியினையும் அவர் தம் முயற்சிக்கு மேலாகப் பயன்தரும். அந்நாட்டின் வளத்தினையும் இப்படலத்தில் 11 முதல் 20 முடியவுள்ள பத்துச் செய்யுட்களில் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். அழகிய நாற்றுக்களைப் பறிப்பவர் மாண்பும், அந்தாற்று முடிகளை நீரிற் சேர்ப்பவர்களது செய்கையும், ஆரவாரம் உடையராய் வயலை உழுபவர்களது வரிசையும் காண் பார்க்கு மேன்மேலும் அன்பினை விளக்கும் தோற்றப் பொலிவினையுடையனவாக எ ங் கு ம் காணப்பட்டன என்பார்,

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும் ஒதையார் செய் புழுநர் ஒழுக்கமும் காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே என் கிருர். நாறு-நாற்று. செய்-வயல், நாறு பறித் தல், முடிசேர்த்தல், செய் உழுதல் என்னும் இத்தொழில்கள் இவைபோன்று,

மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் வித்திப் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையுமன்றே (A-76-2.)