பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் &క్షీణ్ణి

எனத் தொண்டவுழவர் செய்யும் ஞானவுழவின் நன் முயற்சியினை நினைவுபடுத்தி, இறைவனிடத்து ஆருயிர்கள் காதல் செய்வதோர் மெய்யுணர்வினை வழங்கும் நிலையில் அமைந்தன என்பார், காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே என்ருர்.

  • வேந்தன் மேய தீம்புனலுலகம்' என மருத நிலத்துக்குத் தெய்வமாக இந்திரனைக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். மருதவளம் நிறைந்த சோழநாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் மருதநிலத் தெய்வமாகிய இந்திரனுக்குத் திருவிழா நிகழ்ந்த சிறப்பினைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரித்துரைக் கின்றன. பண்டைநாளில் மருதநிலத்தில் நிகழ்ந்த இந்திர வழிபாட்டின் இயல்பினையுணர்ந்த சேக்கிழாரடிகள்,

இந்திர தெய்வதம், தொழுது நாறு நடுவார் தொகுதியே, பழுதில் காவிரிநாட்டின் பரப்பெலாம் ' என அந்நிலக் கருப்பொருள்களுள் ஒன்ருகிய தெய்வத் தினைக் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

நெற்பயிர்கள் வளர்ந்து முற்றிய திறத்தினைச் சொல்ல வந்த திருத்தக்கதேவர்,

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே; (சிவக-53) என வரும் செய்யுளில் உவமைவாயிலாக இனிது விளக்கி யுள்ளார். இவ்வாறு திருத்தக்கதேவர் நெற்பயிர் வளர்ச்சிக்கு உலகியல் நெறிபற்றி உவமை கூறினராக, அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள் நிலவுமெய்ந் நெறியாகிய சிவநெறிபற்றி உவமங்காட்டி விளக்கும் முறையில் அமைந்தன,

சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிக ரின் றிமிக்கு வாலி தாம் வெண்மை உண்மைக் கருவிளும் வளத்தவாகிக் சூல்முதிர் பசலைகொண்டு சுருள் விரித்தரனுக் கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தனகதிர்களெல்லாம்: * பத்தியின் பாலராகிப் பரமனுக் காளாம் அன்பர்

தத்தமிற் கூடிஞர்கள் தலையிஞன் வணங்கு மாபோல் மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலியெல்லாம் :

露龜