பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊盛 பன்னிரு திருமுறை வரலாறு

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்தலான் '

எனத் தாம் இயற்றும் முத்தமிழ்க் காப்பியத்தின் தொடக்கத்திலேயே இனிது புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

திருககரச் சிறப்பு

கயிலைமலையும் சோழநாடும் இத்திருத்தொண்டர் புராணமாகிய காப்பியத்திற்குரிய மலையும் நாடும் ஆகும் என்பது திருமலைச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு என மேற் குறித்த பகுதிகளால் இனிது விளங்கும். முதனூலாகிய திருத்தொண்டத் தொகை அருளிச் செய்யப்பெற்ற திருத் தலமும் சிவனடியார்கள் நிறைந்து வீற்றிருக்கும் சிறப் புடைய தெய்வப் பதியும் திருவாருரே யாதலின், இக் காப்பியத்திற்குரிய நகரம் திருவாரூர்த் திருநகரேயாயிற்று. திருவாரூர்ச் சிறப்பினை ஐம்பது செய்யுட்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். திருநாட்டுச் சிறப்பினை அடுத்து அமைந்த இப்பகுதி, திருநகரச்சிறப்பு-திருவாரூர்ச் சிறப்புதேரூர்ந்த புராணம், மனுநீதிச் சோழர் புராணம், மனுநீதி கண்ட புராணம் என்ற தலைப்புக்களோடு ஏடுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது. ஆயினும் திருநகரச் சிறப்பு என்ற தலைப்பே முன்னுள்ள தலைப்புக்களோடு ஒத்ததாக அமைந்துளது.

சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது

மன்னு மாமல ராள் வழி பட்டது வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச் சென்னியார் திருவாரூர்த் திருநகர்.

என இப்படலத்தின் முதற் செய்யுள் அமைந்திருத்தல் " திருநகரச் சிறப்பு : என்னும் தலைப்புக்குப் பொருத்த முடையதாதல் காணலாம்.

திருவாரூர் சோழநாட்டுப் பேரூர்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பது,

或客 தேசமுமை யறிவதற்கு முன்ளுே பின்ளுே

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே ” (5–34–10}