பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/869

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் $55,

என்ருங்குவரும் திருத்தாண்டகத் தொடர்களால் இனிது புலனும்.

திருவாரூரில் திருமகள் அம்மையப்பரை வழிப்பட்ட செய்தியினை, ஓர் மாதோர் பாகம், திருவினுள் சேர்வதற்கு முன்னே பின்னே திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே” (6-34-1) எனவரும் அப்பர் அருள் மொழியால் உய்த்துணர்ந்த ஆசிரியர், மன்னு மாமலராள் வழிபட்டது” என்ற தொடரில் அதனைப் பொன்னேபோற் போற்றி யுள்ளார்.

திருப்பாற் கடலில் அறிதுயில் கொள்ளும் திருமாலின் மார்பிலே வீற்றிருந்தருளும் தியாகேசப் பெருமான், இந்திரனது வேண்டுகோட் கிரங்கித் தேவருலகில் எழுந் தருளிப் பின்பு முசுகுந்த மன்னன் பேரன்பிற்கிசைந்தருளி அமரர் நாட்டினின்றும் இத்திருவாரூர்த திருக்கோயிலுக்கு எழுந்தருளியுள்ளார் என்பது கந்த புராணத்தால் அறியப் படும் பழைய வரலாருகும். இத்தொன்மை வரலாறு,

  • பையஞ்சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத்தானும்

ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூரமர்ந்த அம்மானே" எனவும்,

"அயிரா வணமேரு தானே றேறி

அமரர் நாடாளாதே ஆரூராண்ட அயிராவணமே என்னம்மானே" (6-25-1)

எனவும் வரும் திருநாவுக்கரசர் திருப்பாடல்களில் இடம் பெற்றுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

வேத வோசையும் வீணையி னேசையும் சோதி வானவர் தோத்திர வோசையும் மாத ராடல் மணிமுழ வோசையும் கீத வோசையுமாய்க் கிளர் வுற்றதே. (திருநகரச்-2) எனவரும் இரண்டாம் பாடல்,

கெண்டை கொண்டலர்ந்த கண்ணிஞர்கள் கீத

வோசைபோய் அண்டரண்ட மூடறுக்கும் அந்தணுரு ரென்பதே (2-1.01.2) எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடற் ருெடரை விரித்துரைக்கும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.