பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 官直

திருப்பெருந்துறையில் வெளிப்பட எழுந்தருளியிருக்க வில்லை யென் பதும் அடியார்களுடன் போந்து வாதவூரடி களை யாட்கொண்ட சில நாட்களுக்குள் மறைந்தருளிளு ரென்பதும்,

' தொண்டனேற்குள்ள வாவந்து தோன் றிகுய் கண்டுங் கண்டிலே னென்ன கண் மாயமே ” எனவும்,

" காணுமாறு காணேனுன்னே யந்நாட்கண்டேனும்

பாணே பேசி யென்றன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி ' எனவும்,

பொய்யனேன் அகநெகப் புகுந்தமு துாறும்

புதுமலர்க் கழலினையடி பிரிந்துங் கையனேன் இன்னுஞ்செத்திலே னந்தோ

விழித்திருந் துள்ளக் கருத்தினை யிழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே

அத்தனே அயன் மாற் கறியொண்ணுச் செய்ய மேனியனே செய்வகை யறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே." எனவும் வரும் திருவாசகத் தொடர்களால் நன்கு தெளியப் படும். எனவே இரண்டாம் முறையாகத் திருப்பெருந் துறைக்குச் சென்ற வாதவூரடிகள் இறைவனே ஆசிரியனுக எழுந்தருளித் தமக்கு ஞானுேபதேசஞ் செய்தற்கு இடமா யமைந்த குருந்தின் நீழலிலேயே அம்மையப்பர் திருவடி களே மலர் தூவி வழிபட்டுத் திருவாசகச் செழும்பாடல்களால் பரவிப் போற்றிஞர் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

அன்பர்களாகிய அடியார்களின் துணையின்றி வாத ஆரடிகள் தனித்துறைதலாற்ருர் எனக் கருதிய சிவபெரு மான் தம்முடன் வந்த அடியார்களை நோக்கி யாம் கயிலைக் குச் செல்லுதல் வேண்டும். நீவிர் இங்கே யிருப்பீராக. இங்குள்ள பொய்கையின் நடுவே ஒரு நாள் தீப்பிழம்பு தோன்றும். நீங்களெல்லோரும் அத்தீயில் மூழ்கி நம்மை படைவீராக’ எனக்கூறி, வாதவூரடிகளை அருகிலழைத்து இத்தொண்டர்களுடன் நீயும் தீயிற் புகாமல் திருவுத்தர கோசமங்கை முதலிய தலங்களைப் பணிந்து தில்லைக்கு வந்து சேர்க என அறிவுறுத்தி மறைந்தருளினுரெனவும், சிலநாட் சென்ற பின் அங்குள்ள பொய்கையில் தீப்பிழம்பு தோன்றவே அடியார்களெல்லாம் அஞ்செழுத்தோதி அத் தழலில் மூழ்கிச் சிவகனநாதர்களாய் எழுந்தார்களெனவும்,