பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德 பன்னிரு திருமுறை வரலாறு

பல்லியங்கள் பரந்த வொலியுடன் செல்வ வீதிச் செழுமனித் தேரொலி மல்லல் யானை யொலியுடன் மாவொலி எல்லை யின்றி யெழுந்துள வெங்கனும் (திருநகரச்-3) எனவரும் மூன்ரும் பாடல், இங்குச் சொல்லப்பெறும் மனுநீதி கண்ட வரலாற்றின் முற்குறிப்பாக அமைந் துள்ளமை கூர்ந்து நோக்கத் தகுவதாகும். மாட மாளிகை சூளிகை மண்டபம் கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் நீடு சாளர நீடரங் கெங்கணும் ஆடல் மாதர் அணி.சிலம் பார்ப்பன. (திருநகரச்.கி) எனவரும் நான் காஞ் செய்யுள்,

' மாட மாளிகை கோபுரங் கூடங்கள் மணியரங் கணிசாலை

பாடு சூழ்மதிற் டைம்பொன் செய் மண்டபம்' (2–109–7) எனவரும் ஆளுடை பிள்ளையார் தேவாரத் தொடரை அடியொற்றியமைந்திருத்தல் காணலாம்.

திருநகரச் சிறப்பின் ஐந்தாம் செய்யுளில் சம்புவின் பங்கினுள் திருச்சேடிப் பரவையாம் மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை'யைப் பற்றியும், ஆருஞ் செய்யுளில், வன்ருெண்டர்க்குத் தூதுபோய் நடந்த செந்தாமரையடி நாறும் திருவீதியைப் பற்றியும் ஆசிரியர் சிறப்பாகக் குறித்துள்ளமை, காப்பியத் தலைவராகிய நம்பியாரூரர், நங்கை பரவையார் ஆகிய இருவருடன் இத்திருவாரூர்க்கு அமைந்த தொடர்பினை நினைவுபடுத்துவதாகும்.

திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரரது வேண்டுகோட் கிரங்கி நங்கை பரவையாரின் ஊடலைத் தனித்தற் பொருட்டு நள்ளிரவிலே ஒருமுறைக் கிருமுறை தூது நடந்தருளிய திருவருட் செய்தியைக் குறிப்பிடும் முறையில் போய் நடந்த' என இருமுறை கூறினர். பின்னுளில் சிறப்புமுறையாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்கு,

அணியுடைய நெடுவீதி நடப்பர் போலும் அணியாரூர்த் திருமூலட்டான ளுரே ' (6)

எனத் திருவிதியில் திருவுலாப் போந்தருளும் முன்னுளைய பொது நிகழ்ச்சி ஆதரவாக அமைந்திருத்தலும் இங்குக் கருதத் தகுவதாகும்.