பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 பன்னிரு திருமுறை வரலாறு

விளக்க மிக்க கலன்கள் விரவலால் துளக்கில் பேரொலி யால் துன்னும் பண்டங்கள் வளத்தொடும் பல வாறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள். (திரு நகரச் - 9) எனச் சிலேடையணி பொருந்தக் கூறியுள்ளார்.

பல்வகை விளக்குகளைக் கொண்ட மரக்கலங்களையும் மாற்ற வொண்ணுத பேரொலியினையும் உடைமையும் நிறைந்த பல பண்டங்களையுடைமையும் பல ஆறுகள் கலக்கப்பெறுதலும் கடலுக்கமைந்த இயல்பு. ஒளிதிகழும் அணிகலன்களையுடைமையும் மாருத பேராரவார முடைமை யும் உலகிற் பல்வேறிடங்களிலும் நிறைந்த பண்டங்கள் பல்வேறு வழிகளில் வந்து ஒருங்கு நிறைந்துள்ளமையும் திருவாரூர் ஆவண வீதியின் சிறப்பாகும். விளக்கமிக்க கலன்கள் என்ற தொடர் கடலுக்குக் கொள்ளுங்கால் மரக்கலங்களையும், ஆவண வீதிக்குக் கொள்ளுங்கால் ஒளி திகழும் அணிகலன்களையும், பலவாறு மடுத்தல் என்ற தொடர், கடலுக்குக் கொள்ளுங்கால் பல ஆறுகள் வந்து கலத்தலையும், ஆவண வீதிக்குக் கொள்ளுங்கால் பல வழிகளால் வந்து நிறைதலையும் குறிக்கும் முறையில் இச்செய்யுள் செம்மொழிச்சிலேடை என்னும் அணி நலம் பொருந்த அமைந்துள்ளமை அறியத்தகுவதாம்.

திருவாரூரில் செந்தமிழ்ப் பாடல்களேயன்றி நான் மறைகளின் ஒலியும் விடியற்காலத்தே கோழியின் குரலுடன் மாறியொலித்தலை,

ஆரணங்களே யல்ல மறுகிடை வாரணங்களும் மாறி முழங்குமால் ' 1 திருநகரச் 10) எனவரும் தொடரிற் கூறியுள்ளார். இத்தொடர்,

" நான் மறையோ சையல்லது

வாழியும் வஞ்சியுங் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேருர் துயிலே " எனவரும் பாடற் பொருளை யுளங்கொண்டு கூறியதுபோல் அமைந்துள்ளது.

ஆறு சமயத் தொண்டர்களும் பிறரும் அன்புடன் உறையும் பல்வேறிடங்களைத் தன்பாற் கொண்டு திகழும் சிறப்புடையது திருவாரூர் என்பதனை, -