பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F5 பன்னிரு திருமுறை வரலாறு

போன்று, நாட்டின் ஆட்சித்தலைவளுகிய மன்னனும் தன்னுட்டில் வாழும் குடிமக்களுக்கு நன்மை தீமைகள் இவையெனக் காட்டி நன்னெறிப் படுத்துத் திறத்தில் குடிமக்களுக்குக் கண் போன்று உதவி செய்பவன் என்பார்,

மண்ணில் வாழ்தரும் மன்னுயிர்கட்கெலாம் கண்ணும் ஆவியும் ஆம் பெருங்காவலன்

என்ருர். பழைய மனு என்னும் வேந்தன் அறிவுறுத்திய அரசியல் நெறியானது, பிற்காலத்தில் வழங்கிய ஒரு குலத்துக் கொரு நீதியாகாது விருப்பு வெறுப்பின்றி எல்லா மக்களுக்கும் ஒத்த பொதுவறமாகத் திகழுந்தன்மைய தெனவும், அத்தகைய தொன்மை நீதியினையே மனுச் சோழன் தன்னட்சிக்குரியதாகக் கடைப்பிடித் தொழு கினமையால் அத்தொன்மை வாய்ந்த மனுமுறை இம்மனுச் சோழன் பெயருடன் இணைத்து வழங்கப் பெறுவதாயிற்று எனவும் விளக்குவார்,

செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன்பெயராக்கிளுன் என்ருர்.

" மனுதருமசாத்திரம் அக்காலத்துக்கு ஏற்ப வகுக்கப் பெற்றது. ஆகலின் இந்நாளில் பலரும் மயங்கியறிவது போல அது கொண்டு செற்றமும் பூசலும் விளைத்தல் பொருந்தாது என்க. செற்ற நீக்கிய செம்மை என்றும், மெய்ம் மனு என்றும் கூறிய குறிப்புக்கள் ஆசிரியரது தெய்வ வாக்காதலால், அவை இந்நாளில் வி ையும் மனுவைப் பற்றிய போரட்டங்களை விலக்கவே எழுந்தன போலவும் தொனிக்கின்றன. தன் பெயராக்கிளுன்முன் மனு அரசன் செலுத்திய நீதி ஆட்சியைப் போலவே இவ்வேந்தனும் செலுத்தியதனுல் அப்பெயருட ன் சேர்த்துச் சொல்லப் பெற்ருன். இக்காலத்துக்கு முன் சொல்லிய அத்தரும சாத்திரம் ஏலாதென்று காலத்திற் கேற்பப் பராசரர் சுமிருதி வகுத்தார் என்றும், அதனுலே * கலெள பராசர ೯೯್ಲಿ விதித்தனரென்றும் கூறுவர். மனு - எல்லோராலும் நினைக்கத்தக்கவன் ; நினைக்க வேண்டிய வற்றையே நினைப்பவன் என்பன பொருளாம்" எனச் சிவக்கவிமணியவர்கள் கூறிய விளக்கம் இங்கு எண்ணத்

தகுவ தாகும்.