பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 感翁巢

மனுச்சோழன் அறம் பொருள் இன்பம் என்ற இவற்றை அறநெறியில் வழுவாது மேற்கொண்டு அறத்திற்கு மாருண தீயனவற்றை விலக்கி அரசர்கள் போற்ற ஆட்சி புரியும் நாளில் அவனது முன்னைத் தவத்தின் பயணுக அவனது பட்டத்தரசியின் வயிற்றில் இளஞ்சிங்கம்போல் வாளுகிய மைந்தளுெருவன் பிறந்தான். தவப்பயனகத் தோன்றிய அப்புதல்வன் சிவபரம்பொருளைச் சிந்தித்து அடைதற்குரிய தெய்வக்கலைகள் பலவற்றையும் திருத்தமுறப் பயின்று போரில் குதிரை, யானை, தேர், படை ஆகியவற்றை நடத்துதலாகிய தொழிற் கல்வியும் கற்றுத் தேர்ந்து இப்பிறவியைப் பெற்றதும் வீட்டின்பமாகிய பெரும் பேறேயாயிற்று என்று பாராட்டும் தன்மையுடை யளுக வளர்ந்து வந்தான். எல்லையில்லாத பழமையான கலைகளில் நிரம்பிப் பெறலருந் தந்தையுளமகிழ, உயர்ந்த நற்குணங்களை யுடையவனுகி இளரவசு என்னும் பதவியை அடைதற்குரிய பக்குவமுடையவனுக வளர் இளம் பருதிபோன்று விளங்கினன். அம்மைந்தன், ஒரு நாள், அரசர் மாளிகையினின்றும் புறப்புட்டு அரசகுமரர் களும் சேனைகளும் தன்னைச் சூழ்ந்துவரத் தேரில் ஏறி அரச வீதியில் உலாப் போந்தான் அங்ங்னம் செல்லும்பொழுது வீதியிலே ஒரு பசுக்கன்று துள்ளிக்கொண்டு குறுக்கே போய் அவனது தேர்க்காலின் அடியில் அகப்பட்டு இறந்தது. அதுகண்டு நெஞ்சம் நெக்குருகிய அக்கன்றின் தாய்ப்பசு மனம் வெதும்பிற்று ; அலறிற்று ; தளர்ந்து மெய், நடுக்கமுற்று வீழ்ந்தது. அத்துயர நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அரசகுமரன் இங்கு அபாயம் வந்ததே என்று உரை தடுமாறி மனத்துயரங்கொண்டு அறிவு கலங்கி 'பசுவும் கன்றும் இன்று எனது உணர்வாகிய பெருமை யழிந்தொழியச் சிதைத்தன. இனி என் செய்கேன் என்று தேரினின்றும் இறங்கி விழுந்தான். அவ்வாறு விழுந்த அரச குமரன், கன்றையிழந்து அலறும் தாய்ப்பசுவை நோக்கி உயிர் பதைபதைத்துச் சோர்வான் ; நிலத்தில் இறந்து கிடக்கின்ற கன்றை நோக்கிப் பெருமூச்சுவிட்டு நிற்பான்; மன்னுயிரனத்தையும் தன்னுயிரெனப் பேணிக் காக்கும் மனு என்னும் என் தந்தைக்கு உலகத்தில் இத்தகைய பெரும் பழி வந்து அடையும்படி நாைெருவன் மைந்தளுகப் பிறந்தது எத்தகைய தீவினையோ என