பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 பன்னிரு திருமுறை வரலாறு

உளங்கவல்வான் ; எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இப் பழியினை மாற்றும் வகையை மறைகளைக் கற்று வல்ல அந்தணர்கள் விதித்த வண்ணம் செய்வது அறநெறியா யிருக்குமாளுல் என்னுடைய தந்தை இதனை அறிதற்கு முன்னமே இக்கொலைப் பாவத்திற்குரிய கழுவாயைச் செய்து முடிப்பேன்’ என்று துணிந்து மறையுணர்ந்த அந்தணர் முன்னே சென்ருன்.

தன் கன்றையிழந்து வருந்திய தாய்ப்பசு, அத்துயரத் தைப் பொருது பெருமூச்செறிந்து விம்மி முகத்திற் கண்ணிர் வழிய, மன்னுயிர் காக்கும் மனுச்சோழனது அரண்மனை வாயிலையடைந்து அவ்வாயிலிற் கட்டப் பெற்றிருந்த மணியினைத் தன் கொம்பினுல் அசைத்து அடித்தது. பழிப்பறை முழக்கம்போலவும் பாவத்தின் ஆரவாரம் போலும் மறலியூர்தியின் கழுத்தின் அணியிலணி யப்பட்ட மணியின் ஒசை போலவும் தோன்றிய அந்த மணியின் ஒலியைக் கேட்ட மன்னன், அரியணையினின்றும் விரைந்திறங்கி அரண்மனை வாயிலை அடைந்தபொழுது, வாயில் காவலர் எதிரே வந்து வணங்கி, அரசே! இங்கே ஒரு பசு வந்து நின்வாயிலில் தொங்கிய மணியினைத் தன் கொம்பினுற் புடைத்தது என்றனர். அரசன், காவலான ர் கூறியதைக் கேட்டு, தன் முன்னர் வருத்தி நின்ற பசுவை நோக்கி, இப்பசுவிற்கு என்ன துன்பம் நேர்ந்தது?’ என வினவும் முறையில் அமைச்சரை இகழ்ச்சியுடன் நோக் கிஞன். அந்நிலையில் முன்னர் நிகழ்ந்தன எல்லாவற்றை யும் அறிந்தவனகிய அமைச்சனுெருவன், அரசனடிகளே வணங்கி நின்று, அரசே! நின்மைந்தன் மணிகள் கட்டிய அழகிய தேர்மீதேறியமர்ந்து அளவில்லாத தேர்ப்படைகள் தன்னைச் சூழ்ந்துவர அரசர் உலாவரும் பெரு வீதியிலே உலாப் போகுங்காலத்து இளைய பசுக்கன்று தேர்க்காலி னுள்ளே புகுந்து இறந்து பட்டதாக, அது கண்டு தளர்ந்த தாய்ப் பசுவாகிய இது, இங்கே வந்து இத்தன் கையைக் செய்தது என்று விண்ணப்பஞ் செய்தான். அம்மொழி யினைச் செவிமடுத்த மன்னன் கன்றையிழந்த அப்பசு அடையும் துயரத்தைத் தான் மேற்கொண்டு கொடிய நஞ்சு தலைக்கேறிஞற்போலும் பெருந்துன்பம் மிகுந்து இத்தீ வினை விளைந்தவாறு என்னே என்று இரங்கி ஏங்கி, ' என் செங்கோல் முறைமை மிகவும் நேர்ம்ையுடையது' என்