பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§64 பன்னிரு திருமுறை வரலாறு

அதுகேட்டு எதிர்நின்ற மதிநூல் வல்ல அமைச்சர்கள், * தொன்மையுடையதாய் நிலைபெற்றுவரும் நாட்டினை ஆளும் வேந்தர் பெருமானே! நிலைபெற்றுள்ள இந்நீதி முறையினையொட்டிய வழக்கு உலகத்தில் இதுபோல் முன்பு நிகழ்ந்துள்ளது. ஆகவே இதற்காக அரசகுமரனைக் கொல்வித்தல் முறையாகாது’ எனக்கூறினர்.

அறத்தின் மெய்ம்மைத்தன்மையினை நன்குணர்ந்த மனுச்சோழன், அவ்வாறு தொழுதுரைத்த அமைச்சர்களை வெகுண்டு நோக்கி, அறமே கூறும் நாவினையுடைய அமைச்சராகிய நீவிர் இவ்வாறு அறத்திற்கு மாருன மொழி. யினையும் சொல்லத் துணிந்தீர். வேத வழிப்பட்ட மிருதி நூல்களிற் சொல்லப்பட்டு வரும் விதிகள் ஒருபுறம் கிடக்க, அறநெறியின் செம்மை வழிப்பட்ட உண்மை நிலையினை நீங்கள் சிந்தித்துணராது பேசுகின்றீர்கள். எந்த உலகத் தில் எந்தப் பசு இத்தகைய கன்றையிழந்த துன்பத்தினுல் வெதும்பிப் பெருமூச்சு விட்டுக் கதறிக்கொண்டு சென்று அரசரது வாயிலிற் கட்டப்பெற்றிருந்த மணியினை அடித்துத் தளர்ந்து வீழ்ந்தது? இதனை ஆராய்ந்து சொல்லுங்கள். அன்றியும், இந்திரன் மால் பிரமன் முதலிய தேவர்கள் போற்றிப் புகழ்ந்திறைஞ்ச வீற்றிருந்தருளும் தியாகேசப் பெருமான் விரும்பிக் கோயில்கொண்டருளிய திருவாரூரிலே பிறந்த சிறப்புடைய நல்லுயிரை எனது மைந்தன் கொன்ருன் ஆதலால் அவனைக் கொல்வதே இங்குத் துணிதற்குரிய வினையாகும் என நினைமின் என்று கூறினன். என் மைந்தன் செய்த கொலைக் குற்றத்துக்கு இதுவே தக்க தண்டனையாகும். இப்பசு மனம் வருந்தும் பெருந்துயரத்தை நீக்க முடியாத யான் வருந்தும் அளவில் நில்லாது இப்பசு உற்ற துன்பத்தை யானும் மேற்கொண்டு வருந்துதலே என்னுற் செய்தற்குரிய செயலாகும்’ என்று எண்ணிய மனுச் சோழன், எவ்விடத்தும் எக்காலத்தும் எவராலும் செய்தற்கரிய செய்கையைச் செய்யத் துணிந் தான். அதனையுணர்ந்த அமைச்சர்களும் அவன் முன் நிற்றற்கு அஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்ருர்கள்.

பின்னர் மனுச்சோழன், தன் மைந்தனை அங்கு அழைத்துவரச் செய்து, அமைச்சளுெருவனை நோக்கி, புதல்வளுகிய இவன அந்த வீதியிலேயே தேர்க்காலின்