பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 865

கீழ்க் கிடத்தித் தேரை இவன் மீது செலுத்துக' எனப் பணித்தனன். அதனை நிறைவேற்றவொண்ணுத நிலையின கிைய அமைச்சன் அவ்விடத்தைவிட்டு அகன்று தனது இன்னுயிரைத் துறந்தான். அதனையுணர்ந்த மனுச் சோழன், தன் குலத்துக்கு ஒருமகளுகத் தான் பெற்ற மைந்தனைத் தானே அழைத்துக்கொண்டு அவ்வீதியினை அடைந்தான். தன்னுடைய குலத்துக்கு ஒரே மைந்தனுக இவன் உள்ளான் என்பதனையும் மனங்கொள்ளாது அறத் தின் வழிச் செல்லுதலே தனது கடமையென்று உணர்ந்து, தன் மகனது மார்பின்கண்ணே தேர்ச்சக்கரம் பொருந்தும் படி அவன்மீது தேரைச் செலுத்தின்ை மனுவேந்தன். உலகிற்கு அருமருந்து போன்ற அரசாட்சி என்பது யாவ ராலும் மேற்கொண்டு நிகழ்த்துதற்கேற்ற எளிமையுடை யதோ ? அருமையுடையதல்லவோ ?

எவ்வுயிர்க்கும் அருளாளனுகிய மனுச்சோழனது செய் தற்கரிய இச்செயலைக்கண்டு பொருது மண்ணுலகத்தவர்கள் கண்ணிராகிய மழையினைச் சொரிந்தார்கள். வானவராகிய தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள். பெரியோனுகிய அம்மன்னனது கண்ணெதிரில் வீதிவிடங்கப்பெருமாளுகிய இறைவன் அழகிய அவ்வீதியிலே விண்ணவர்கள் போற்ற விடையின்மீது எழுந்தருளி நின்ருன். சடையின் ஒரு பக்கத்து இளையபிறைச் சந்திரனும் தனித்துவிழிக்கும் திரு நெற்றியும் இடப்பாகத்தில் உமையம்மையும் எல்லாப் பக்கங்களிலும் பூதகணங்களும் சூழ்ந்து போற்றும் பெருமை யும் ஆகிய தெய்வக் காட்சியைக் கண்டு மன்னன் போற்றித் துதித்தனன். விடைமீதெழுந்தருளிய சிவபெருமானும் அறத்தின் வெற்றியையுடைய மனுச்சோழனுக்குத் திரு வருள் புரிந்தான். அந்நிலையிலேயே, தேர்க்காலிற்பட்டு இறந்த பசுவின் கன்றும், அரசனது அரசாட்சிக்கு உரிமை யுடைய மைந்தனகிய கன்றும், இறந்த அமைச்சனும் உயிர் பெற்றெழுந்தனர். அது கண்ட மன்னன் இன்னதன்மை யினை அடைந்தான் என்று அறியாதவனுய்ப் பெரு மகிழ்ச்சியில் திளைத்தனன். எல்லார்க்கும் முதல்வனுகிய இறைவனே முற்பட்டு எழுந்தருளில்ை நிறைவேருத ச்ெய லும் உளதோ ? எல்லாம் இனிதின் நிறைவேறுமன்ருே !

மனுவேந்தன் தன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய மகனை எடுத்து மார்புறத் தழுவிப் பெருமகிழ்ச்சியுற்றுப்

55