பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 பன்னிரு திருமுறை வரலாறு

பசுவின் துயரத்தால் விளைந்த தனது முன்னைத் துயரத்தி னின்றும் நீங்கின்ை. தனது மடியிலே சுரந்து பெருகிய இனிய பாலின உயிர்பெற்றெழுந்த இளங்கன்று மகிழ்ந்து பருகி எஞ்சிய பால் நிலத்தினை நனைக்கும் வண்ணம் அங்கு வந்த பசுவும், தனது கன்றை இழந்த முன்னைத் துன்பத்தி னின்றும் நீங்கி இன்புற்றது.

இங்ங்ணம், திருவாரூர்ப் பூங்கோயிலில் வீற்றிருந் தருளும் இறைவன், வெற்றித் திறம்வாய்ந்த மனுச்சோழ னுக்குத் திருவாரூர்த் திருவீதியிலே யாவரும் காணக் காட்சி தந்து திருவருள் புரிந்து சென்றருளிய பெருங்கருனைத் திறத்தைக் கண்டு, அவ்விறைவன் என்றும் இவ்வாறே தன்னடியார்களுக்கு எளிவந் தருள்புரியும் பெருமையினை ஏழுலகத்தாரும் எடுத்துரைத்துப் பாராட்டிப் போற்றுவாரா யினர். இவ்வாறு அறநெறியில் அளவிலாத உயிர்களுக்கு அருள்புரிந்து யாவர்க்கும் முதல்வராகிய வீதிவிடங்கப் பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் பெருமை வாய்ந்த திருவாரூர்மேற் சிறப்பித்துரைக்கும் புகழுரை நமது அளவுபட்ட சொல்லின் எல்லேயுள் அடங்குவதோ? அத் தகைய சிறப்பமைந்த திருநகரத்துக்கு அகமலர் போல் விளங்குவது அறமேயுருவாகிய இறைவன் எழுந்தருளிய பூங்கோயிலாகும் என மனுச்சோழனது இறைவன் திருவருள் வழிப்பட்ட அறத்தொடு பொருந்திய அரசியல் நீதி முறையினை விரித்துரைக்கு முகமர்கத் திருவாரூர்த் திருநகரத்தின் சிறப்பினை ஆசிரியர் சேக்கிழாரடிகள் இனிது விளக்கியுள்ளார்.

இவ்வாறு மன்னுயிரனைத்தையும் தன்னுயிர்போற் பேணிக்காத்து முறைசெய்த மனுச்சோழனது வரலாற்றை அறிதற்கு ஆதாரமாய் அமைந்தது, இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரமாகும். கோவலனைக் கள்வனென்று கொண்டு ஆராயாது கொலைபுரிந்த பாண்டியனது அவையிற் சென்று, தன் கணவன் கள்வனல்லன் என வழக்குரைக்க முற்பட்ட கண்ணகி தேவியார், நீர்வார் கண்ணை எம் முன் வந்தோய் ! யாரையோ நீ என வினவிய நெடுஞ்செழியனை நோக்கித் தன் நாடும் ஊரும் தன் நாட்டு வேந்தரது அறநெறிபிறழா அரசியல் முறையும் இவையெனப் புலப்படுத்தும் நிலையில்,