பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 869

சிறிதும் குற்றம் இல்லை என்பதனையும், விளைவறியாத பசுவின் இளங் கன்று துள்ளிக் குதித்தோடித் தேர்க்காலில் அகப்பட்டிறந்த இத்துன்ப நிகழ்ச்சி எதிர்பாராத நிலையில் தன்னியல்பில் நிகழ்ந்ததென்பதனையும் அரசனுக்குக் குறிப்பாக விளங்கவுணர்த்தும் முறையில் இச்செய்யுள் அமைந்துள்ளமை காணலாம்.

மலர் தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த மன்னன், என் நாட்டில் வாழும் உயிர்க்கெல்லாம் யானே உயிராவேன் எனக் கொண்டு காக்கும் கடமையுணர்வுடையாளுதலின் அவ்வுரை கேட்ட மன்னன் ஆவுறு துயரம் எய்தி'ன்ை என்ருர் மைந்தன் செய்த குற்ற்ம் தந்தையையும் சாரும் என்றுணர்ந்த மன்னன், தன் மகன் செய்த குற்றத்திற்கு மந்திரிகள் கூறிய வண்ணம் மறையவர்கள் விதித்த விதிப்படி கழுவாய் செய்ய உடன்படாது,

'" இழக்கின்றேன் மைந்தனையென்று எல்லீரும் சொல்லிய இச்

சழக்கின்று நான் இசைந்தால் தருமந்தான் சலியாதோ "

என மறுத்துரைக்கின்ருன்.

தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவரிடத்தும் கண்ணுேட்ட மின்றி நடுவு நிலையைப் பொருந்தி, அன்னேர் செய்த குற்றத்திற்குச் சொல்லிய தண்டனையை அமைச்சர் முதலியோருடன் ஆராய்ந்து செய்வதே அரசனது நீதி முறையாகும் என்பது,

ஒர்ந்து கண்ணுேடா திறைபுரிந் தியார் மாட்டும் தேர்த்துசெய்வஃதே முறை ' (541)

எனவரும் திருக்குறளால் அறிவுறுத்தப் பெற்றது. இத்திருக்குறளுக்குரிய விளக்கவுரை போன்று அமைந்தன.

மாநிலங் காவலளுவான் மன்னுயிர்காக்குங்காலைத் தான தனுக் கிடையூறு தன்னல் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள் வரால் உயிர்தம்மால் ஆன பயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லளுே (36) என்மகன் செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செய இசைந்தே அன்னியளுேர் உயிர்கொன்ருல் அவனைக்கொல் வேளுளுல் தொன்மனுநூற் ருெடைமனுவால் துடைப்புண்ட தெனும்

வார்த்தை மன்னுலகிற் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்ருன்

(37)