பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 பன்னிரு திருமுறை வரலாறு

எனவரும் செய்யுட்களாகும். இங்குத் தொன் மனுநூல் தொடை என்றது, இடைக்காலத்தில் தோன்றிய ஒரு குலத்துக் கொருநீதி கூறும் மனு மிருதியை விலக்கி, எக்குலத்தார்க்கும் எவ்வுயிர்க்கும் இசைய அறவாழியந் தனன் அருளிய அறநெறியின் வழியமைந்த ஆதிமனு நீதியைச் சுட்டியது.

'மறைமொழிந்த அறம் புரிதல் தொன்று தொடுநெறி என்ற அமைச்சர்களை நோக்கி, இவ்வண்ணம் பழுதுரைத் தீர்' என வெகுண்டு முகம் புலர்ந்த மனுச் சோழன்,

அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க, அறநெறியின் செவ்விய உண்மைத்திறம் நீர் சிந்தை செயா துரைக்

கின் மீள் (40) எனவும்,

திருவாரூர்த் தோற்றமுடையுயிர் கொன்ருன் ஆதலிளுல் துணிபொருள்தான், ஆற்றவுமற்றவற் கொல்லும்

அதுவேயாம் ' எனவும்,

இவ் ஆன், மனமழியும் துயர கற்ற மாட்டாதேன் வருந்துமிது

தனதுறு பேரிடர் யானும் தாங்குவதே கருமம் (42) எனவும் தெளிந்துரைக்கின்ருன். தான் அனுபவிக்கும் மகிழ்ச்சி பிறர் தம்மோடுகூடி அனுபவித்த போது இன்பம் மிகுதலும், துயரம் அனுபவிக்கும் போது பிறரோடு கலந்து நுகரும் நிலையில் அத்துன்பம் குறைதலும் உலகியலிற் கண்ட உண்மையாகும். இவ்வியல்பினை உளத்திற் கொண்டு, தனது கன்றையிழந்து வருந்தும் இப்பசு உற்ற பெருந் துன்பத்தை அகற்ற மாட்டாத நிலையில் அத்துயரை யானும் தாங்கி நின்று அதைேடு அனு பவித்துப் பங்கு கொண்டு குறைப்பேன் என்பது படத் " தனதுறு பேரிடர் யானும் தாங்குவதே கருமம் ” என்கின்ருன்.

கொலை முதலிய பெருங்குற்றஞ் செய்தாரைப் பிறர்க்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நிலையில், அக்குற்றம் நிகழ்ந்த இடத்திலேயே பலருங்காணுமாறு தண்டித்தல் அக்கால நீதி முறையாகும். செய்தார்க்குச் செய்தபடியே தண்டம் விதித்தல்’ என்னும் தண்டநூல் விதிப்படி பகவின் இளங் கன்று தேர்க்காலில் ஊரப்பட்டு இறந்த அந்த இடத்