பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 873

உலக முதல்வகிைய இறைவன் திறத்தும் அவன்பால் மாரு அன்பினராகிய அடியார் திறத்தும் குற்றம் புரிந்தாரை ஒறுத்தலாகிய தண்டனை, இப்பிறப்பில் அவர்தம் பாவத் தைப் போக்கி மறுமையில் அவர்களை நற்கதியடைவிப்ப தென்பது, ஞாலமறியப் பிழை புரிந்த எச்சதத்தன் என்னும் மறையவன் சண்டேசரது கோலமழுவால் எற்றுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன் சிவலோகம் எய்தப்பெற்ருன், என்றும், இயற்பகையாருடன் போர் செய்திறந்த சுற்றத் தார் வானிடையின்பம் பெற்ருர்’ என்றும் இக்காப்பியத் தில் ஆசிரியர் கூறுதலால் இனிது புலனுகும். மற்றைக் காப்பியங்களிலெல்லாம் உலகியலாட்சிக்கு இன்றியமையாத அரசியலைக்கூறி அதனையடியொற்றிய நிலையில் காப்பியச் செய்திகள் விரித்துரைக்கப்படுவன. திருத்தொண்டர் புராணமாகிய இக்காப்பியத்தில், உலகியலாட்சிக்கெல்லாம் உறுதுணையாய் நின்று என்றும் மாரு இயல்பினதாகிய திருவருளின் வழிப்பட்ட அருளியலாட்சியை முற்கூறி, அதன் வழி நிகழும் அடியார் செய்கைகள் விரித்துரைக்கப் பெறுவன.

மனுவேந்தனுக்கு ஆரூரிறைவன் வெளிப்பட்டருள் புரிந்த இவ்வரலாற்றை ஆசிரியர் முதற்கண் கூறியது இறைவன் தன் பால் அன்புடைய அடியார்களுக்கு என்றும் எளிவந்தருளும் பெருமையாகிய பெருங்கருணைத் திறத் தினை உலக மக்கள் யாவரும் உணர்ந்து போற்றுதற் பொருட்டேயாகும். இந்நுட்பத்தினை,

"பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்

வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே யருள்கொடுத்துச்

சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்

கென்றுமெளிவரும் பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும் ” எனவரும் செய்யுளில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

மக்கள் வாழும் ஊருக்குச் செல்வப் பொலிவினை வழங்குவது அங்குள்ள திருக்கோயிலாகும். திருக்கோயி லில்லாத திருவிலுரரும்’ எனவரும் அப்பர் அருள்மொழி திருக்கோயிலைத் தன்னகத்தே கொண்டுள்ள ஊர்களே திரு வுடைய ஊர்களாம் என்பதனை எதிர்மறை முகத்தால்

அறிவுறுத்துவதாகும். திருவாரூர் நகரின் சிறப்புணர்த்தப்