பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 875

எல்லாவுலகங்களையும் ஒத்து விரிந்து விளங்குவதாகும். இவ்வாறு இதன் முதலிலுள்ள நான்கு செய்யுட்களால் தேவாசிரிய மண்டபத்தின் சிறப்பினை ஆசிரியர் விளக்கு கின்ருர். இதன்கண் 5 முதல் 10 வரையுள்ள ஆறு செய்யுட்கள் இங்கு எழுந்தருளிய திருத்தொண்டர்களின் இயல்பினைத் தொகுத்துரைக்கும் முறையிலமைந்துள்ளன. 11-ஆம் செய்யுள் அடுத்துவரும் தடுத்தாட்கொண்ட

புராணத்திற்குத் தோற்றுவாயாக அமைந்துளது.

தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அடியார்கள், அம்மையப்பராகிய இறைவரால் விரும்பி ஆட்கொள்ளப் பெற்றவர்கள்; தம்திருமேனியில் மயிர் சிலிர்த்தலும் விதிர் விதிர்ப்பும் தோன்ற, இறைவன் பால் பேரன்பு மிக்குத் தோன்றும் சிந்தையினர்; தம்மால் இயன்ற கைத்திருத் தொண்டு செய்தலையே தமது கடமை யாகக் கொண்டவர்கள் ; இத்தன்மையராகிய அடியார்கள் எண்ணிலாதவராக உள்ளார்கள். குற்றமில்லாத உருத் திராக்க மணிகள் விளங்கும் தம் திருமேனியின் மேல் பூசப் பெற்று விளங்கும் தூயதிருநீற்றினைப் போலவே உள்ளத் திலும் தூய்மையுடையவர்கள் , தமது ஒளியில்ை எல்லாத் திசைகளையும் இருள் நீங்கி விளக்கமுறச் செய்தவர்கள் : சொல்லினுல் அளவிட்டுரைக்க வொண்ணுத பெருமையுடன் திகழ்பவர்கள் , ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையிற் பிறழ்ந்தாலும் தாம் சிறிதும் மனங்கலங்காது மாதொரு பாகராகிய இறைவரது செந்தாமரை மலர் போலும் திருவடிகளை மறவாத இயல்புடையவர்கள் ; இறைவனது பொருள் சேர் புகழ்த்திறத்தினையே காதலாகிக் கசிந்து ஒதும் உறுதியுடையராய் நன்னெறியில் நிலைபெற நிற்பவர்கள் : குற்றமில்லாத குணங்களின் குன்றெனத் திகழ்பவர்கள் ; ஒருகாற் கெட்டொழிதலும் ஒருகால் உளதாதலும் இல்லாத திருவாகிய நிறையுடைய பெருஞ் செல்வத்தை நிலையாகப் பெற்றவர்கள் ; மட்பாண்டத்தின் சிதைவாகிய இழிந்த ஒட்டினையும் உலகமக்களால் மதிக்கப் பெறும் செம் பொன்னையும் ஒருதன்மையவாக நோக்கும் உள்ளமுடையவர்கள் ; இறைவனுடன் பிரிவற ஒன்று தற்குக் காரணமாகிய அன்பின் திறத்தாலே அம்முதல்வன ஆண்டானுகவும் தம்மை அடிமையாகவும் கருதிக் கைகளாற்ருெழுது போற்றும் தொண்டின் திறத்தையே