பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 877

என்னும் இப்பகுதியெனக் கொள்ளுதல் பொருந்தும். இப்பகுதியிற் கூறப்பெறும் திருத்தொண்டர் இயல்புகள் அப்பெருமக்கள் திருக்கூட்டமாகக் கூடியுள்ள நிலையில் அவர்தம் சமூகத் தோற்றத்தைப் பொது வகையாற் புலப் படுத்தும் முறையிலமைந்த பொதுநிலைக் காட்சியாகும். பின்வரும் சரிதங்களில் தனித்தனியே வகுத்துரைக்கப் பெறும் அடியார் இயல்புகள், அந்த அந்த அடியார்களின் தனிநிலைத் தோற்றத்தைத் தெளிவுபடுத்திக் காட்டும் முறையில் அமைந்த தனிநிலைக் காட்சிகளாகும். பொதுவும் சிறப்புமாகிய இவ்விருவகைக் காட்சிகளையும் முறையே அடியார்களின் சமூக தரிசனம், தனித்தரிசனம் எனப் பெயரிட்டு வழங்குவதும் உண்டு. w

இறைவனருள் வாய்க்கப் பெற்ற திருத்தொண்டர் களே எல்லாவுலகங்களையும் இடர் நீக்கி ஆளுதற் குரிய தகுதிவாய்ந்தவர்கள் என்பதனை,

  • அகில காரணர் தாள் பணிவார்கள் தாம்

அகில லோகமும் ஆள ற்குரியர் ’

எனவரும் தொடரில் சேக்கிழாரடிகள் அறிவுறுத்துகின்ருர். இவ்வறிவுரை,

懿兹 நீலமாமிடற், ருல வாயிலான்

பால தாயிஞர், ஞால மாள்வரே "

என்னும் ஆளுடைய பிள்ளையார் வாய்மொழியைத் தழுவி அமைந்திருத்தல் அறியத்தகுவதாகும்.

இத்திருத்தொண்டர்கள், இறைவர் தாமே எளிவந்து விரும்பி ஆட்கொள்ளப் பெற்ற சிறப்புடையவர்கள் என்பார், அத்தர் வேண்டி முன் ஆண்டவர் என்ருர், இத்தொடர், வெண்ணெய்நல்லூர் இறைவர் நம்பியா ரூரரைத் தடுத்தாட் கொண்டருளிய வரலாற்றினை நினைவு படுத்துவதாகும். வேண்டி என்னைப் பணிகொண்டாய் (குழைத்த-6) எனவும், தானே வந்தெம்மைத் தலையளித் தாட் கொண்டருளும் வான்வார்கழல் (திருவெம்பாவை-6) எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நினைக்கத் தக்கன. அன்பினல் மெய்த்தழைந்து விருப்புறு

சிந்தையார் என்பது,