பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 879

அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார் களது பெருமை சொல்லால் அளவிட்டுரைக்குந்தரத்த தன்று என்பார், பேச ஒண்ணுப் பெருமை பிறங்கினர் என்ருர்.

  • துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று ' (திருக்குறள் -22) என்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும்.

ஐம்புலன்களை யடக்கிய செம்புலச் செல்வர்களாகிய இத்திருத்தொண்டர்கள் இவ்வுலகில் ஐம்பெரும் பூதங்கள் தம் நிலையினின்று மாறுபடும் அல்லற் காலத்தும் நிலைகலங் காத உள்ளத்திண்மையுடையராய்ச் சித்தத்தைச் சிவன் பாலே வைத்த மெய்த்தவச் செல்வர்கள் என்பது,

பூதம் ஐந்தும் நிலையிற்கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் " என்பதல்ை உணர்த்தப்பட்டது.

வானந் துளங்கிலென் மண் கம்ப மாகிலென் மால் வரையுந் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேல்ை நஞ்சுண் டுனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே ’’

(4 – 113 – 8) என்ருங்கு வரும் அப்பர் அருள் மொழியாலும்,

கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டமுறிர் என விழிமிழலையிறைவர் ஆளுடைய பிள்ளையார்க்கும் ஆளுடைய அரசர்க்கும் கனவில் தோன்றியருளியதாகப் பின்னர்க் கூறப்படும் வரலாற்றுக் குறிப்பினலும் இவ் வியல்பு இனிது புலளுதல் காணலாம்.

எத்தகைய இடர்கள் அடுக்கி வரினும் இறைவனது திருப்பெயரை இடைவிடாது ஒதும் பெருங்காதலாகிய உறுதிப்பாட்டில் தளராது நிற்பவர்கள் திருத்தொண்டர் கள் என்பது தோன்ற, ஒதுகாத லுறைப்பின் நெறி நின் ருர் என்ருர். இத்தொடர்,

' கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே '’ (4–11–1) என இறைவனைப் பாடிப் போற்றி, ஒன்றிய மன்னவன் சூட்சி திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவராகிய