பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/895

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 88?

ஒன்றிகுற் குறையுடையோ மல்லோமன்றே ' (6–98–5) என அப்பரடிகள் தம்மையொத்த அடியார் இயல்பாகக் கூறியதனை புளங்கொண்டு யாதுங் குறைவிலார் என்ற தொடர் அமைந்திருத்தல் காணலாம்.

ஈண்டு வீரம் என்பது, தமது கொள்கைக்கும் குறிக் கோளுக்கும் மாருக எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அஞ்சாது அவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுதற் குரிய மனத்திண்மையாகும். இத்தகைய திண்மை,

அஞ்சுவதியாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லே " என அப்பரடிகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளமை காணலாம். சிவகாமியாண்டாரது பூக்குடலையைப் பறித்துச் சிதறியது அரசரது பட்டத்து யானையென்றறிந் தும் அதனை மழுவால் எறிந்து வீழ்த்திய எறிபத்த நாயனர் செயலும், திருக்கோயிற் பூமண்டபத்து மலரை யெடுத்து மோந்தவள் பல்லவ வேந்தனுடைய பட்டத் தரசி யென்றறிந்திருந்தும் அவளது மூக்கினையரிந்த செருத்துணை நாயனர் செய்கையும், இவ்வாறே தம் முயிரைப் பொருட்படுத்தாது செயற்கரிய செயல்களைச் செய்து நிறை வேற்றிய ஏனை நாயன்மார்கள் திருப்பணி களும் அடியார்களின் வீரத்திற்குச் சிறந்த எடுத்துக்

காட்டுக்களாகும். ' அழியாவிரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறடியேன் என்று, ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப்பதிகம் அருள் செய்தார் ' எனப்

பின்னரும் ஆசிரியர் இவ்விரவுணர்வினைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

வேண்டுமாறு விருப்புறு வேடத்தர் தாண்டவப் பெருமான் தனித்தொண்டர்கள் என்பது அடியார் திருவேடமானது காண்பாருள்ளத்தில் விருப்பினை விளைக்கவல்லதென்பதனைப் புலப்படுத்து வதாகும்.

கண்டகவுணியக்கன்றும் கருத்திற்பரவும் மெய்க்காதற் ருெண்டர் திருவேடம் நேரேதோன்றிய தென்னத்' தொழுதார் எனத் திருவேடத்தின் சிறப்பினை ஆசிரியர் பின்னர் விளக்கியுள்ளமை காணலாம்.

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார், இந்த மாதவர் கூட்டத்தை எனத் தம் நூல் நுதல்

56