பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88? பன் னிரு திருமுறை வரலாறு

பொருளாகிய திருத்தொண்டர் திருக் கூட்டத்தின் பெருமையினையும், " எம்பிரான் அந்தமில் புகழ் ஆலால சுந்தரன்’ என இக்காப்பியத்திற்கு மூலமான திருத் தொண்டத் தொகையினை யருளிய ஆசிரியரும் இக்காப்பியத் தலைவரும் ஆகிய தம்பியாரூரரது பெருமையினே யும் , சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ் என ஆரூரர் அருளிய திருப்பதிகத்தின் பெருமையினையும், வந்து பாடிய வண்ணம் உரை செய்வசம் ' என இத்திருப் பதிகம் தோன்றிய வரலாற்றினையும் குறித்து அடுத்து வரும் பகுதிக்குத் தோற்றுவாய் செய்து கொள்கின்ருர்,

தடுத்தாட்கொண்ட புராணம்

திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளிய இறைவர், அற்புதப்பழ ஆவணங் காட்டி நம்பியாரூரரைத் தடுத்தாட் கொண் டருளிய செய்தியை விரித்துரைக்கும் பகுதியாதலின் இது தடுத்தாட்கொண்ட புராணம் என்னும் பெயர்த்தாயிற்று. நம்பியாரூரர் திருக்கயிலாயத்தில் இறைவனுக்கு அணுக்கத் தொண்டரான ஆலால சுந்தரராய் விளங்கிய முன்னைய நிலையில் நிகழ்ந்த வரலாறு திருமலைச் சிறப்பிற் கூறப் பட்டது. கயிலாயத்திற் கமலினி அணிந்திதை என்னும் மாதர் மேல் மனம் வைத்த ஆலால சுந்தரர், இறைவன் பணித்தவண்ணம் தென்புவிமீது திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரிலே மாதொருபாகளுர்க்கு வழி வழியடிமை செய்யும் வேதியர் குலத்திலே மேம்படு சடையனருக்கும் ஏதமில் கற்பின் மிக்க மனைவியார் இசை ஞானியார்க்கும் மகவாகத் தோன்றி, இறைவனல் தடுத்தாட் கொள்ளப்பெற்று அருட்டுறை யீசனைப் பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப்பதிகத்தாற் பாடிப் போற்றித் திருத்துறையூர் திருவதிகை, தில்லைச் சிற்றம்பலம் முதலிய திருத்தலங்களை இறைஞ்சிப் பாடித் திருவாரூரையடைந்து தம்பிரான் தோழராய், நற்பெரும் பான்மை கூட்டக் கமலினியாராகிய நங்கை பரவையாரைக் கண்டு காதல் கொண்டு திருமணம் புணர்ந்து ஆரூரிறைவர் அருளால் அடியார் புகழ் பரவும் திருத்தொண்டத் தெ கைத் திருப்பதிகத்தினைத் திருவாய் மல. ந்தருளியது வரையுள்ள செய்திகள இத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் விரித்துரைக்கப் பெறுகின்றன.