பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 885

பெருமான் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையினைப் பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத்தருளும்போது தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என இத் திருக்கூட்டத்தாரையே முதற்கண் போற்றி யெடுத் தருளினர் என்பது,

தொல்லமால் வரை பயந்த தூயாள்தன் திருப்பாகன் அல்லல் தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால் தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேனென் றெல்லையில் வண் புகழாரை யெடுத்திசைப்பா

மொழியென்ருன் (தடுத்தாட் - 199) எனவரும் செய்யுளாற் புலனும்.

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் திருக் கூட்டத்தார் ஒன்பதின் மருள் ஒரு கூட்டத்தாராகிய இவர்கள், மூவாயிரவர் என்னும் தொகையினராவர் என்பது,

' முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்கு மூர்த்தியென்னப்

பட்டான " (7-90-7]

என வரும் நம்பியாரூரர் வாய்மொழியாலும்,

" தில் ஆலயம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்ருேனே ” (72) எனவரும் திருக்கோவைத் தொடராலும்,

" முடியா முத்தீவேள்வி மூவாயிரவரொடும்

குடிவாழ்க்கை கொண்டு நீ குலவிக் கூத்தாடினேயே " என வரும் திருவிசைப்பாத் தொடராலும் இனிதுணரப் படும். தில்லைப்பதியிற் செழுமறை யோராகிய இவர்கள் கூத்தப்பெருமானுக்கு உரிமைத் தொழில் புரிவோர் என்பர் நம்பியாண்டார் நம்பிகள்.

தில்லைவாழந்தணராகிய இவர்கள் நீற்றினுல் நிறைந்த கோலத்தினர் ; நிருத்தனுக்கு உரிய தொண்டாம் பேற் றினையுடையவர்கள் ; பெருங்குனங்களுக்கு எல்லையாய் விளங்குபவர்கள் : இறைவன்பாற் பெருகிய அன்பினுல் அடித்தவம் புரிந்து வாழ்பவர்கள் , தில்லைத் திருக்கோயிலி னுள்ளே தங்கள் தங்களுக்கேற்ற திருப்பணிகளை மேற் கொண்டு அகம்படித் தொண்டு செய்பவர்கள் ; முத்தி வளர்த்து வேள்வி செய்பவர்கள்; எவ்வுயிர்க்கும். அரு ரூடையராய் அறத்தையே தமக்குரிய பொருளாகக்