பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 891.

இயற்பகை காயனர்

இல்லையே யென்னத இயற்பகைக்கும் அடியேன்” என நம்பியாரூரராற் போற்றப் பெற்ற இந்நாயனுர், சோழ நாட்டின் கடற்றுறைப் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத் திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் ; மாறிலாத நன்னெறியினில் விளங்கும் மனையறம்புரி மகிழ்ச்சியின் பேறெலாம் இறைவனடியார் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ்பவர். அரனடியார்க்கு அடித்தொண்டு புரியும் அடிமைத் திறத்தில் நிலைபெற்ருெழுகும் இவர், தம்பால் உள்ளன எல்லாவற்றையும் அடியார்களுக்கு இல்லையென்னுது வழங்கும் இயல்பினராய்த் தந்நலங் கருதாது உலகியற்கைக்கு மாருக ஒழுகினமைபற்றி * இயற்பகையார்’ என அழைக்கப்பெற்ருர்.

  • மிக்க சீரடியார்கள் யாரேனும் வேண்டும் யாவையும்

இல்லையென்ஞதே இக்கடற்படி நிகழ முன்கொடுக்கும் இயல்பின்

நின்றவர் உலகியற் பகையார்” எனவரும் தொடரில் இயற்பகையார் என்னும் பெயர்க் காரணத்தைச் சேக்கிழாரடிகள் குறிப்பாக விளக்கியுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

இயற்பகை நாயனரது ஈகைத்திறத்தினை உலகத் தார்க்கு உணர்த்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் தூய நீறு பொன்மேனியில் அணிந்த துர்த்த வேடமுடைய வேதியர்கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனர் அவ்வடியாரைச் சிந்தையன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவத்தினுலன்ருே என்று வரவேற்று வழிபட்டு நின்ருர், நின்ற அன்பரை அவ்வேதியர் நோக்கி, சிவ னடியார்கள் குறித்து வேண்டினவற்றையெல்லாம் குன மெனக் கொண்டு ஒன்றும் மறுக்காது உவந்தளிக்கும் நுமது ஈகைத் திறத்தினைக் கேள்வியுற்று நும்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இன்று நான் இங்கு வந்தேன். அதனை நீர் அளித்தற்கு இசையலாம் என்ருல் அதனை நான் வெளியிட்டுச் சொல்லலாம்’ எனக்கூறினர். அது கேட்ட இயற்பகையார், எந்தப் பொருளாயினும் என்பா லிருக்குமாயின் அஃது எம்பெருமாளுகிய இறைவனடி