பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 பன்னிரு திருமுறை வரலாறு

யாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக’ என்ருர். அதுகேட்ட

வேதியர், மன்னுகாதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு’ எனச்சொன்னர். அதுகேட்ட நாயனர் முன்னையினும் மகிழ்ச்சியுடையராய், எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயணுகும்’ என்று கூறி, விரைந்து வீட்டினுள்ளே புகுந்து கற்பிற் சிறந்த மனைவியாரை நோக்கி, விதிமணக் குல மடந்தையே இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன் ' என்ருர். அதுகேட்ட மனைவியார், மனங் கலங்கிப் பின் மனந்தெளிந்து தம் கணவரை நோக்கி, என் உயிர்க்குத் தலைவரே ! என் கணவராகிய நீர் எனக்குப் பணித்தருளிய கட்டளை இதுவ யின் நீர் கூறிய தொன்றை நான் செய்யும் அவ்வள வல்லது எனக்கு வேறுரிமை உளதோ ?’ என்று சொல்லித் தன் தனிப் பெருங்கணவராகிய இயற்பகையாரை வணங்கினுர், இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக் கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினுள். திருவினும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந் தருளிய மறை முனிவர் சேவடிகளைப் பணிந்து திகைதது நின்ருர்.

மறை முனிவர் வேண்டிய வண்ணம் மாது தன்னைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார் வேதியரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின் ருர் வேதியராக வந்த இறைவர், இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லும் நிலை யில் நின் அன்புடைய சுற்றத்தாரையும் இல் ஆரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும் என்ருர் அதுகேட்ட இயற்பகையார், 'யானே முன் னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமாளுகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவுக்குக் காலந்தாழ்த்து நின்றது பிழையாகும்’ என்று எண்ணி, வேறிடத்திற்புக்குப் போர்க்கோலம் ஆண்டு வாளும் கேடக முந்தாங்கி வந்து வேதியரை வணங்கி மாதினையும் அவரை யும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாகப் பின்னே தொடர்ந்து சென்ருர்.