பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 893

இச்செய்தியை அறிந்த மனைவியார் சுற்றத்தாரும், வள்ளலார் சுற்றத்தாரும் இயற்பகை பித்தைைல் அவன் மனேவியை மற்ருெருவன் கொண்டு போவதோ? என வெகுண்டு தமக்கு நேர்ந்த பழியைப் போக்கு தற்குப் போர்க் கருவிகளைத் தாங்கி மறையவரை அணுகி துர்த்தனே! போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்னை இங்கேயே விட்டுவிட்டு எமது பழி போக இவ்விடத்தைவிட்டு ஒழிக’ எனக்கூறி அவரைத் தடுத்து நிறுத்தினர். மறை முனிவர் அதுகண்டு அஞ்சிய வரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ருர். வீரக் கழலனிந்த இயற்பகையார், அடியனேன் அவரையெல் லாம் தறையிடைப்படுத்துகின்றேன் என வேதியர்க்குத் தேறுதல் கூறி, பழிக்கு அஞ்சிப் போருக்கு வந்த தம் சுற்றத் தாரை நோக்கி, ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும்! அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துடிப்பீர் . என்று அறிவுறுத்தினர். அதுகேட்ட சுற்றத்தார், ஏட நீ என்ன காரியத்தைச் செய்து இவ்வாறு பேசுகின் ருய். நின்செயலால் இந்நாடு அடையும் பழியையும் இது குறித்து நம் பகைவராயிஞர் கொள்ளும் இகழ்ச்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணுது உன் மனைவியை வேதியனுக்குக் கொடுத்து வீரம் பேசுவதோ ? யாங்கள் போரிட்டு ஒரு சேர இறந்தொழிவதன்றி நின் மனைவியை மறையவனுக்கு கொடுக்க ஒரு பொழுதும் இசையோம் என்று வெகுண்டு கூறினர். அதுகேட்ட இயற்பகையார், ! உங்கள் உயி"ை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரைத் தடையின்றிப் போக விடுவேன் என்று கூறி, உறவினரை எதிர்த்துப் பொருதற்கு முந்தினர். உறவினர்கள் மறையவரைத் தாக்குதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற் பகையார், சுற்றத்தார்மேற் பாய்ந்து அனைவரையும் வாளிகுற் கொன்று வீழ்த்தினர். எதிர்ப்பவர் ஒருவரு மின்றி நின்ற இயற்பகையார், வேதியரை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன் என்று கூறித் திருச்சாய்க் காடுவரை துணை வந்தபொழுதில், மறைமுனிவர் நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் எனக்கூறினர். இயற் பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பிஞர்.