பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8驶盛 பன்னிரு திருமுறை வரலாறு

மனைவியை அடியார்க்கு உவகையுடன் அளித்துத் திரும்பிப் பாராது செல்லும் நாயஞரது அன்பின் திறத்தை எண்ணி மகிழ்ந்த இறைவர், மெய்ம்மையுள்ளமுடைய நாயனரை மீளவும் அழைக்கத் தொடங்கி, * இயற்பகை முனிவ ஒலம் ஈண்டு நீவருவாய் ஒலம் அயர்ப்பிலாதானே ஒலம் அன்பனே ஒலம் ஒலம் செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஒலம் ஒலம்' என அழைத்தருளிர்ை. அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், அடியனேன் வந்தேன் வந்தேன். தீங்கு செய்தவர் உளராயின் அன்னேர் என் கைவாளுக்கு இலக்கா கின்ருர் என்று கூறி விரைந்து வந்தார். மாதொரு பாகளுகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினன். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணுது அவகுடன் சென்ற மாதினக் கண்டார்; விசும்பின் கண்ணே இறைவர் மாதொருபாகராக விடைமேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார் ; நிலமிசைப் பலமுறை விழுந்து தொழுதார் ; எல்லையில் இன்பவெள்ளம் அருளிய இறைவனை உளங்கசிந்து போற்றி வாழ்த்திகுச். அப் பொழுது அம்மையப்பராகிய இறைவர், பழுதில தாய், நின் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். நின் மனைவி புடன் நம்பால் வருக எனத் திருவருள் புரிந்து மறைத் தருளினர். செயற்கருஞ் செய்கை செய்த திருத்தோண்ட ராகிய இயற்பகையாரும் தேற்றம் மருவிய தெய்வக் கற்பினே யுடைய அவர் தம்மனைவியாரும் ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உட னுறையும் பெருவாழ்வுபெற்றனர். அவர்தம் சுற்றத்தா ராய் அவருடன் போர்செய்து உயிர் துறந்தவர்கள் வானுலகடைந்து இன்புற்றனர்.

இளையான்குடி மாறகாயனர்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் என இந்நாயனர் திருத்தொண்டத் தொகையிற்போற்றப் பெறுதலால், இவர் அவதரித்த திருத்தலம் இளையான் குடி என்பதும், இவரது இயற்பெயர் மாறன் என்பதும் இனிது புலஞகும்.