பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 பன்னிரு திருமுறை வரலாறு

பேரன்பும் வாய்ந்த இவர், சிவனடியார் யாவராயினும் தம்மனைக்கண் இன்மொழியுடன் எதிர்கொண்டு போற்றி ஆசனத்திருத்தி அருச்சித்து வழிபட்டு அறுசுவை நிறைந்த திருவமுதினை அன்புடன் அரு த்தி மகிழ்பவர். அடியார்க் குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக் காலத்திலே மட்டுமன்றி நல்குரவாகிய அல்லற்காலத்தி லும் விடாது செய்ய வல்லவர் இந்நாயனுர் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்தத் திருவுள்ளங் கொண்ட இறைவர், இளேயான் குடிமாறர் வாழ்க்கையில் செல்வம் குறைய வறுமையுண்டாகும் வண்ணம் செய் தருளினர். இவ்வாறு செல்வ வளம் கருங்கவும் தம் மனஞ்சுருங்குதலின் றித் தம்மிடமுள்ள நிலங்கள் முதலிய வற்றை விற்றும் தம்மையே விற்றும் கொடுக்கத் தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும் அடியார்க்கு அமுதளித்த லாகிய பணியை விடாது செய்து வந்தார்.

இளையான்குடிமாறர், மழைக்காலத்திலே ஒரு நாள் பகல் முழுவதும் உணவின்றிப் பசிமிக்கு வீட்டின் கதவைத் தாளிட்டிருக்கும் நிலையில், மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறஞரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத் தார். மாறஞர் கதவைத் திறந்து அடியாரை வீட்டி னுள்ளே அழைத்துச் சென்ருர் , மழையிளுல் நனைந்த அடியார் திருமேனியை ஆடை கொண்டு துவட்டி இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்குத் திருவமுது செய்வித்தல் வேண்டுமென் னும் பெருவிருப்புடன் தம் மனைவியாரை நோக்கி, அடியார் மிகவும் பசித்துள்ளார். என் செய்வது? முன்னமே நமக்கு இங்கு உணவில்லை. ஆயினும் இறைவனடியார்க்கு அமுதளித்தல் வேண்டுமே ? இதற்கு .யாது செய்வோம்? ' என வினவினர். அது கேட்ட மனைவியார், நம் வீட்டில் மற்ருென்றும் காண் கிலேன். ஏதிலாரும் இனித்தருவாரில்லை. பகற்பொழுதும் போயிற்று. தேடிப்போதற்குரிய இடமும் வேறில்லை. தீவினையேன் என் செய்வேன்? என்று சொல்லி, இன்று பகற்பொழுதிலே வறுமை நீங்க வயலில் விதைக்கப்பட்ட செந்நெல் மு ைகொண்டுள்ளவற்றை வாரிக்கொணர்ந் தால் இயன்ற அளவில் அமுதாகச் சமைத்தலும் கூடும். இதுவன்றி வேறு வழியறியேன் என்ருர்.