பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/911

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 8g?

அதுகேட்டு மகிழ்ந்த மாறஞர், மைக்குழம்பு போன்ற நள்ளிருளிலே இறைகூடையைத் தலையிற் கவித்துக் கொண்டு வயலையடைந்து காலினுல் தடவிச் சென்று மழை நீரில் மிதந்த நெல்முளைகளைத் தம்கைளால் வாரிக் கூடை யில் நிறைத்துக் கொண்டு விரைந்து வீடு திரும்பினர். மனை வாயிலிலே கணவரை எதிர்நோக்கி நின்ற மனைவியார், நென்முளையை வாங்கிச் சேறுபோக நீராற் கழுவிச் சோறு சமைத்தற்கு விறகு இல்லையே என வருத்த முற்ருராக, மாறஞர் தம் வீட்டுக் கூரையில் சிதைந்து விழும் அலக்கினைப் பிரித்தார். மனைவியார் அவற்றைக் கொண்டு அடுப்பு மூட்டி நெல் முளையை ஈரம்போக வறுத்துக் குற்றி அரிசியாக்கி உலையிலிட்டுச் சோறு சமைத்து, ' இனி, க்றிக்கு யாது செய்வோம் ' எனக் கவலையுற்ருர். அப்பொழுது மாறஞர், வீட்டுத் தோட்டத் திற்குச் சென்று, குழி நிரம்பாத புன்செய்ப் பயிரினக் கைகளால் தடவிப் பிடுங்கிக் கொணர்ந்தார். மனைவியார் அவற்றை வாங்கி ஆய்ந்து தம் கைத்திறத்தால் வெவ் வேறு கறியமுதாகச் செய்து முடித்து இனிச் சிவனடி யாரைத் திருவமுது செய்ய அழைப்போம்" என்ருச். மாறனுர் தம் மனைக்கண் எழுத்தருளிய சிவனடியாரை எழுப்பி, அடியனேன் உய்ய என்பால் எழுந்தருளிய பெரியோய் ! அமுது செய்தருள்க என வேண்டி நின்ருர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினர். அது கண்டு மாறனரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமா தேவியாருடன் விடைமேல் தோன்றி, அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ நின் மனைவியோடும் என்பெரும் உலகமாகிய சிவலோகத்தினை எய்தி இருநிதிக் கிழவனுகிய குபேரன் நினது ஏவல் கேட்ப இன்பம் ஆர்ந்திருப்பாயாக’ என்று அருள் செய்து மறைந் தருளினர்.

மெய்ப்பொருள் காயனர்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன். ' என நம்பியாரூரராற் போற்றப்பெற்ற இந்நாயனுர், சேதி நாட்டிலே திருக்கோவலூரிலே மாதொரு பாகஞர்க்கு வழி வழியாக அன்பு செலுத்தும் மலையமான் குடியிற்

57