பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 90? செல்லும் ஆரூரனுக்கும் அவனை வலிய ஆட்கொண்ட சிவ பெருமானுக்கும் புறகு (புறம்பானது) என்று கூறினர். அப்பொழுது ஞாலம் உய்யவும் நாம் உய்யவும் சைவ சமயத்தின் சீலம் விளங்கவும் திருத்தொண்டத் தொகை பாடும்படி ஆரூர்ப் பெருமான், தம்மை வழிபட வந்த வன்ருெண்டர்க்கு முன்னேதோன்றி நாம் அடியார் திருக்கூட்டத்தினுள்ளே உள்ளோம் என்று அருள் செய்தார். சுந்தரர் அவ்வடியார்களைப் பணிந்து திருத் தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். அதைக்கேட்ட விறன் மிண்டர் மிக மகிழ்ந்து ஆரூர்ப்பெருமான் வன்ருெண்டர் ஆகிய அவர்களது மாறிலாப் பேரருளுக்கு உரிய பெருமையுடையராய் விளங் கினர். திருத்தொண்டத் தொகையால் உலகம் நலம் பெற்று விளங்குதற்குக் காரணராகிய விறன் மிண்ட நாயனுர், தம் பெருமான் அருளினுலே அம்முதல்வன் தாள் நிழற் கீழ் இனிது அமரும் சிவகணத் தலைவராம் பெரு வாழ்வு பெற்று இன்புற்ருர்.

அமர்நீதி நாயனர்

" அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன் எனப் போற்றப் பெற்ற இந்நாயனுர், சோழநாட்டிலே பழையாறை என்னும் பழம்பதியிலே வணிகர் குலத்தில் தோன்றியவர். சிவனடியார்களுக்குக் கோவணமும் கீளும் கொடுக்கும் கடப்பாட்டினை மேற்கொண்ட இந்நாயனுர், திருநல்லூரில் சிவனடியார்கள் திருவமுது செய்தற் பொருட் டுத் திருமடங்கட்டித் திருவிழாக் காலத்தில் தம்முடைய சுற்றத்தாரோடும் அங்குத் தங்கியிருந்து அடியார்களுக்குத் திருவமுது அளித்து வந்தார்.

ஒரு நாள் சிவபெருமான், அமர்நீதியார்க்கு அருள் புரியத் திருவுளங்கொண்டு, அந்தணர் குலத்துப் பிரமசாரி யாகக் கோலம் கொண்டு வந்து, தாம் தண்டில் முடித்து வைத்திருந்த கோவணங்கள் இரண்டினுள் ஒன்றைப் பாதுகாப்பாக ைவ த் திருக் கும் படி அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டுக் காவிரியில் நீராடச் சென்ருர். சென்றவர், தாம் அமர்நீதியாரிடம் கொடுத்த கோவ னத்தை மறையும்படி செய்து, சிறிது நேரத்திற்குள் மழை