பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 903

சமமாய் நேர் நின்றன. அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக் கோலத்தை அமர்நீதியார்க்குக் 'காட்டியருளிஞர். அத்தெய்வக் காட்சியைக் கண்ட அமர்நீதியாரும் மனைவி யாரும் மைந்தரும் அம்மையப்பரை வணங்கிப் போற்றித் தாம் அமர்ந்துள்ள தராசுத் தட்டே விமானமாகி மேற் செல்ல, என்றும் இறைவனைக் கண்டு வணங்கி மகிழும் அழிவில்லாத சிவலோக வாழ்வினைப்பெற்று இன் புற்ருர்கள் என்பது வரலாறு.

இவ்வரலாறு, வழி வழியாக உலக மக்களால் வியந்து பேசப்பெற்று வருதலைத் திருநல்லூரிற் சென்று அறிந்த திருநாவுக்கரசர்,

" நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே

கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக்

கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடு மங்கொர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் ருேவிவ் வகலிடமே என வரும் திருநல்லூர்த் திருவிருத்தத்தில் இதனைக் குறித்துப் போற்றியுள்ளார். அமர்நீதியார் வரலாற்றில் நிகழ்ந்த இவ்வியப்புடைய நிகழ்ச்சி திருநல்லூரில் நிகழ்ந்த தென்பதற்கு இத்திருவிருத்தம் சான்ருக அமைந்துள்ளமை காணலாம்.

எறிபத்த நாயனர்

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் எனப் போற்றப்பெற்ற இந்நாயனுர், சிவனடியார்களுக்கு ஒர் இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை யுடையவர் ; சோழ மன்னர்களுக்கு உரிமையுடைய பெரு நகரமாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவர். அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்க்குத் தீங்கு புரிந்த கொடியோரைப் பரசு என்னும் மழுப்படை யினுல் எறிந்து தண்டிக்கும் இயல்பினராதலின், எறிபத்தர் என அழைக்கப்பெற்ருர். இலைத் தொழிலமைந்த வேல் போலும் கூர்மைவாய்ந்த மழுப்படையினைத் தாங்கினமை யால் இலை மலிந்த வேல் நம்பி எனச் சிறப்பிக்கப்பெற்ருர்,