பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

904 பன்னிரு திருமுறை வரலாறு

கருவூர்த் திருவானிலைத் திருக்கோயிலில் இறை வர்க்குத் திருத்தொண்டு புரியும் சிவகாமியாண்டார் என்னும் முதிய அடியவர், வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மையுடையராய் வாயைத் துணியாற் கட்டித் திரு நந்தவனஞ் சென்று மலர்கொய்து பூக்குடலையில் நிறைத்து அக்குடலையைத் தண்டின் மேல் உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து சென்ருர், மகாநவமியின் முதல் நாள் (அட்டமி) ஆன அன்று அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்ச் சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி அலங்கரிக்கப்பெற்று மதச்செருக் குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து செல்லும் நிலையில், சிவகாமியாண்டார் கையிலுள்ள பூக்குடலையைப் பறித்துச் சிதறியது. யானை மேலுள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டாராகிய அடியவர், இறைவர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு புடைக்க முற்பட்டு விரைந்து ஓடி, முதுமை காரணமாக இடறி விழுந்து, இறைவனை நினைந்து சிவதா சிவதா என முறையிட்டு அாற்றினர். அடியாரது அரற்ருெலியைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர், யானையின் செய்கையையறிந்து வெகுண்டார் ; யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக் கையை மழுவினுல் துணித்தார் ; அதற்கு முன்னும் இருமருங்கும் செல்லும் குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலுள்ள பாகர் இருவரையும் மழுவினல் வெட்டி வீழ்த்தி நின்ருர்,

தமது பட்டத்து யானையும் பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்டு வெகுண்ட புகழ்ச் சோழர், இது பகைவர் செயலாகும் என்றெண்ணி, நால் வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும் பாகரும் வெட்டப்பட்டிறந்த அவ்விடத்தே பகைவர் எவரையும் காணுதவராய் இருகையானபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண் டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அங்குள்ளார் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய அடியார்கள் பிழைகண்டாலல்லது இவ்வாறு