பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 905

கொலைத்தண்டம் செய்யமாட்டார்கள். எனவே என்

岛点

னுடைய யானையும் பாகர்களும் பிழை செய்திருத்தல் வேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய்,

தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டுக் குதிரையினின்று இறங்கி, மலைபோலும் யானையை இவ்வடியவர் நெருங்கிய நிலையில், அவ் யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன். அம்பலவாணரடியார் இவ்வளவு வெகுளியை யடைதற்கு நேர்ந்த குற்றம் யாதோ ? என்று அஞ்சி எறிபத்ததை வணங்கினர். எறிபத்தர், யானையின் சிவாபராதச் செயலையும் பாகர் விலக்காதிருந்ததனை யும் எடுத்துரைத்தார். அதனை யுணர்ந்த புகழ்ச் சோழர், சிவனடியார்களுக்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இந்தத் தண்டனை போதாது ; இக்குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும். ஆளுல் மங்கலம் பொருந்திய மழுப் படையினுற் கொல்வது மரபன்று. வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுதற்கு ஏற்ற கருவியாம்' என்று தமது உடைவாளை ஏற்றுக்கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினர்.

அதுகண்ட எறிபத்தர், கெட்டேன், எல்லையற்ற புகழாளராகிய வேந்தர்பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்புக்கு அளவில்லாமையை யுனர்ந்தேன் என்று எண்ணி, மன்னர் தந்த வாட்படையை வாங்கமாட்டாத வராய்த் தாம் வாங்காதுவிட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக்கொண்டார். அது கண்ட புகழ்ச் சோழர், அடியாரை வணங்கி இவ்வடியார் வாளிகுல் எனது குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்" என உவந்து நின்ருர். அதுகண்ட எறிபத்தர், “ தமது பட்டத்து யானையும் பாகரும் என் மழுப்படையால் மடித் தொழியவும் உடைவாளைத் தந்து, எனது குற்றத்தைப் போக்க என்னையும் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர் க்கு யான் தீங்கு நினைத்தேன். ' என்று மனம் வருந்தி, இவ்வாளில்ை எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத் தக்கது என்று எண்ணி, வாட்படையினைத் தம் கழுத்திற் பூட்டி அரிதற்கு