பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 907

இவர், அரசர்களுக்கு வாட்படைப் பயிற்சி யளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் அத்தொழிலால் வரும் பொருள்வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினர். ஏளுதி என்பது சிறந்த படைத்தலைவர்களுக்கு அரசர் வழங்கும் பட்டமாகும். ஏளுதி நாதர் என இவர் அழைக்கப்பெறுதலால் இவர் சேனதிபதி களில் தலைசிறந்தவர் என மன்னனுல் நன்கு மதிக்கப்பட்ட படைத்தலைவர் என்பது இனிதுபுலனுகும்.

ஏளுதிநாதர், வாட்படை பயிற்றும் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்துப் போர்ப் பயிற்சி பெற விரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றமையால், அவரது தாயமுறையினளு ைஅதிசூரன் என்பானுக்கு அத் தொழிலில் வருவாய் குறைவதாயிற்று. அதனுல் ஏனுதி நாதர் பால் பொருமையுற்ற அதிசூரன், வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என அவரைப் போருக்கு அறை கூவியழைத்தான் நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்ருர் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும் ' என்ருன் ஏனுதிநாதரும் அதற்கு இசைந் தார். இருவரிடையே நிகழ்ந்த வாட் போரில் அதிசூரன் தோற்ருேடின்ை.

தோற்ருேடிய அதிசூரன், ஏளுதிநாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணிஞன் தம் இருவருக்குத் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்காலத்தே வேருேரிடத்திற் போர்செய்வோம், வாரும் ' என்று ஒருவனைக் கொண்டு ஏனுதிநாதர்க்குச் சொல்லியனுப் பிஞன். அது கேட்ட ஏளுதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்க்களத்திற் சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின் ருர், தீங்கு குறித்தழைத்த அதிசூரளுகிய தீயோன், திருநீறுதாங்கிய நெற்றியினுரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏளுதிநாதர் ' என அறிந்து, முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், வெண்ணிறு நெற்றி விரவப்புறம் பூசி நெஞ்சத்தே வஞ்சனையாகிய கறுப்பினை யுட் கொண்டு வாளும் கேடகமும் தாங்கித் தான் குறித்த இடத்திற்குப் போய் அங்கு நின்ற ஏளுதிநாதரைக்கண்டு அவரை