பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 பன்னிரு திருமுறை வரலாறு

அணுகும்வரை தனது நெற்றியைக் கேடகத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏகுதிநாதர் சமயந்தெரிந்து அவனே எதிர்த் துப் பொருதற்கு முற்பட்ட அளவில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தைச் சிறிது ఃఖఉత్తిత్రాత్రాత அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்ருர் ஏளுதி நாதர். கண்ட பொழுதே கெட்டேன். இவர் சிவபெரு மானுக்கு அடியவராகிவிட்டார். ஆதலால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று தம் கையிலுள்ள வாளையும் கேடகத்தையும் நீக்கக் கருதி யவர், ஆயுதம் இல்லாதவரைக் கொன் ருர் என்றபழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும் பலகையையும் கையிற் பற்றியபடியே போர் செய்வார்போல் வாளா எதிர் நின்ருர், அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனுகிய அதிசூரனும் கொலே செய்ய வேண்டும் என்ற தனது எண்ணத்தினை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏளுதி நாதர்க்கு எதிர்தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட் படையில்ை பாசம் அறுத்து உயர்ந்த அன்பராகிய ஏளுதிநாதரை என்றும் உடன் பிரியாப் பேறளித்து மறைந் தருளினர்.

கண்ணப்ப நாயனர்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கடியேன்” எனப் போற்றப் பெற்ற இந்நாயனர் பொத்தப்பி நாட்டினைச் சார்ந்த உடுப்பூரிலே வேடர் தலைவனுக விளங்கிய நாகன் என்பானுக்கு அவன் மனைவி தத்தை என்பவள்பால் மக வாகத் தோன்றியவர். இவருக்குப் பெற்ருேர் இட்ட பெயர் திண்ணணுர் என்பதாகும். மலையுறை மக்கள் வாழ்த்தச் சிலை பயின்று கலைவளர் திங்களே போற் பதினுருண்டு நிரம்பிய திண்ணணுர், முதுமையால் தளர்ச்சியுற்ற தந்தை பணித்த வண்ணம் வேடர்குலக் காவல் பூண்டார். வேடர்கள் சூழ வேட்டைக்குச் சென்று காட்டிலுள்ள கொடிய விலங்குகளை எய்து கொன்ருர், காட்டில் விரித்த வலையினையறுத்து ஓடிய வலிய பன்றியொன்றைத் துரத்திச் சென்று குற்றுடை வாளால் இருதுணிபடக் குத்திக்