பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 909

கொன்ற திண்ணணுர், களைப்புற்றவராய் நீர் வேட்கையால் பொன் முகலியாற்றை அடைந்தார் ; எதிரே தோன்றும் காளத்திமலையினைக் கண்டார். அம்மலைமேல் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்ற நாணன் வழி காட்டிச் செல்ல மலைமீதேறிக் குடுமித் தேவராகிய ஏகநாயகரைக் கண்டார் ; பேருவகையால் ஓடிச் சென்று தழுவிக் கொண் டார். இறைவரது அருள் நோக்கத்தால் அன்புருவம் பெற்ற திண்னனர், அண்ணலைப் பிரியமாட்டாதவராய், இவர் தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்துதல் வேண்டும் ' என்று மலையினின்றும் இறங்கிப் பொன் முகலியின் கரையேறிக் காடன் என்பான் கொத்தி வைத் திருந்த பன்றி யிறைச்சியைத் தீயிலிட்டுக் காய்ச்சிப் பல்லினல் அதுக்கிச் சுவையும் பதமும் அறிந்து அவ்வூன முதத்தை ஒருகையிலும் வில்லை மற்ருெருகையிலும் ஏந்தி, இறைவர்க்குரிய திருமஞ்சன நன்னிரைத் தமது வாயிலும் திருப்பள்ளித்தாமமாகிய பூவினைத் தமது தலையிலும் கொண்டு, காளத்தி மலைமீது ஏறிச் சென்ருர், சென்றவர், காளத்தி நாதர் முடிமீது அணியப் பெற்ற பச்சிலைகளைச்' செருப்பணிந்த பாதங்களால் விருப்புறத்தள்ளித் தம் வாயிலுள்ள நன்னீரைத் திருமஞ்சனமாக ஆட்டித் தலையிலுள்ள மலர்களை இறைவர்க்குச் சாத்திப் பன்றி யிறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார்.

இவ்வாறு காளத்தியிறைவர்பாற் பேரன்புடையராய திண்னனர், தமது பெற்ருேர் அழைக்கவும் செல்லாது, அல்லும் பகலும் காளத்தியிறைவரைப் பிரியாது வழிபட்டு தின் ருர். திண்ணணுரது பேரன் பின் திறத்தைச் சிவ கோசரியார்க்கு அறிவுறுத்தத் திருவுளங்கொண்ட காளத்தியிறைவர், ஒருநாள் தமது வலக்கண்ணில் உதிரம் பெருகி ஒழுகும்படி செய்தார். அது கண்டு ' என் அத்தனுக்கு அடுத்த தென்னே எனச் சிந்தை கலங்கிய திண்னனுர், எங்கும் சென்று பச்சிலைகளாகிய நன் மருந்தினைத் தேடிக் கொண்ர்ந்து பிழிந்தும் உதிரம் நில்லாமையாற் பெரிதும் வருந்தினர். " உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் ” என்னும் பழமொழி நினைவுக்கு வந்தமையால், தமது வலக்கண்னைப் பிடுங்கிச் சிவலிங்கத் திருவுருவில் அப்பினர். குருதி நின்றது. அந்நிலையில் இறைவரது இடத் திருக்கண்ணில் குருதி வழியத் தொடங்