பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 911

இடந்த கண்ணப்பன் ' ' கனே கொள் கண்ணப்பன்

என ஆளுடைய நம்பியும்,

கண்ணப்ப ளுெப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்குெப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ண்ப் பணித்தென்னே வாவென்ற வான் கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்று தாய் கோத்தும்பி’

என ஆளுடைய அடிகளும் கண்ணப்பரது அன்பின் பெருமையினை உளமுருகிப் போற்றியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். காளத்தி யிறைவரைக் கண்ட ஆறே நாளில், தன் பரிசும் வினையிரண்டும் சாரும்மலம் மூன்றும் அற அன்புருவாகித் தம் கண்ணே இடந்து அப்பிய கண்ணப்பரது செயற்கருஞ் செய்கையினை,

  • நாளாறிற் கண்ணிடந்தப்ப வல்லேனல்லன்

எனப் பின்வந்த சான்ருேர் நெஞ்சம் நெக்குருகிப் பாராட்டி யுள்ள மையும் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

குங்குலியக் கலய காயனர்

காலனைக் காய்ந்த பெருமான் வீற்றிருந்தருளும் திருக் கடவூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் குங்குலியக் கலய நாயனர். சிவனடி பச வி உருகிய அன்பு கூர்ந்த சிந்தையராகிய இவர் திருக்கடவூர்த் திருக்கோயிலில் நாளும் குங்குலியத் தூபம் இடும் பணியினைத் தமது தலை யாய தொண்டாகக் கொண்டிருந்தார். இறைவனருளால் இவர்க்கு வறுமை வந்துற்றது. அவ்வறுமை நிலையிலும் செம்மையுடைய சிந்தையராகிய கலயனுர், தமக்குரிய நிலம் முதலிய உடைமைகளை விற்றுத் தாம் செய்தற்குரிய குங்கு லியப் பணியைத் தவருது செய்து வந்தார். மக்களும் சுற்றமும் பசியால் வருந்தினர். அந்நிலையில் கலயனர் மனைவியார், கனவளுர் கையில் மங்கல நாளுகிய தாலியைக் கொடுத்து நெற்கொள்ளும் என் ருர், தாலியைப் பெற்று நெல் வாங்கச் சென்ற கலயஞர், வழி யெதிரே குங்குவியப் பொதி கொண்டு வந்த வணிகனை தோக்கி, இப்பொதி என்கொல் ' என வினவினர். வணிகனும் இது குங்கு