பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/926

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

912 பன்னிரு திருமுறை வரலாறு

லியப் பொதி என்ருன். அது கேட்டு மகிழ்ந்த கலயனர், பொன்தரத்தாரும் என்று அவனிடம் தாலியைத்தந்தார். அதனைப் பெற்றுக்கொண்டு வணிகன் குங்குலியப் பொதியைத் தந்தான். அதனைப் பெற்றுக் கொண்ட கலயனர், விரைந்து கடவூர்த் திருவீரட்டானத் திருக் கோயிற் பண்டாரத்திலே அதனை ஒப்படைத்துவிட்டு இறை வனருளைப் போற்றி அத்திருக்கோயிலிலே இருந்தார்.

இறைவன் பணியினல் இருநிதிக் கிழவளுகிய குபேரன், கலயனர் திருமனையில் பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல்வளனும் பொங்க மன் பெருஞ் செல்வமாக்கி வைத்தனன். அன்று தள்ளிரவில் இறைவன் அருள்புரியத் துயிலுணர்ந்தெழுந்த கலயனர் மனைவியார், வீட்டிலுள்ள பெருஞ் செல்வத்தினைக்கண்டு எம்பிரான் அருளாம் என்று இருகரம் குவித்துப் போற்றித் தம் பெருங்கணவனுர்க்குத் திருவமுதமைக்கச் சார்ந்தார். வீரட்டப்பெருமான், கலயனர் அறியும்படி சால நீ பசித் தாய். நின் மனையில் நண்ணிப் பாலின் இன்னடிசில் உண்டு துன் பந் தவிர்க எனப் பணித்தருளிஞர். இறை வரது அருள் மறுத்திருக்க அஞ்சிய கலய நாயனுர், தமது வீட்டினையடைந்து அங்குள்ள பெருஞ் செல்வத்தைக் கண்டு தம் மனைவியாரை நோக்கி, ' வில்லொத்த நுதலாய் ! இந்த விளைவெலாம் என்கொல் ?’ என வினவ, அவரும் எம்மான் அருள் தர வந்தது ' என்ருர். இறைவன் அரு ளிய பெருஞ் செல்வத்தினை நோக்கி வியந்த கலயனுர், வறுமைத்துயர் தவிர்ந்து அப்பெருஞ் செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு இன்னமுதருத்தி இனிது வாழ்ந்தார்.

அந்நிலையில், திருப்பனந்தாள் தாடகை வீச்சரத்துச் சிவலிங்கத் திருமேனியின் சாய்வு நீக்கிப் பெருமானைச் செவ்விதின் நிறுத்தி வழிபட எண்ணிய மன்னன் தன் பெருஞ்சேனைகளையும் யானைகளையும் பூட்டி இழுப்பித்தும் நேர்நில்லாமையாற் பெரிதும் வருந்திய செய்தியைக் கேள்வியுற்றர். மன்னனது துயர கற்றிச் சிவலிங்கத் திரு மேனியைச் செவ்விதின் நிறுத்தி வழிபட வெண்ணிய கலயனர், திருப்பனந்தாளை அடைந்தார். சேனையும் யானை களும் வலித்திழுக்கவும் திருமேனி எழாமை நோக்கி,