பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

914 பன்னிரு திருமுறை வரலாறு

திற்கு எழுந்தருளினர் மாவிரத முனிவரைக் கண்ட மானக் கஞ்சாறர் எழுந்து எதிர் சென்று உருகிய அன்புடன் பணிந்தார். வந்த அடியவர், இங்கு நிகழும் மங்கலச் செயல் யாது ? என வினவினர், அடியேன் பெற்ற மகளது திருமணம்' என மறுமொழி பகர்ந்தார் கஞ்சாறனர். அது கேட்ட அடியவர், துமக்கு மங்கல முண்டாகுக என வாழ்த்தினர். கஞ்சாறனர், திருமணக்கோலம் புனைந்த தம் மகளை அழைத்து வந்து சிவனடியாரை வணங்கச் செய்தார். பரவ அடித்தலம் கொடுப்பாராகிய அவ் வடியவர், மஞ்சுதழைத்தென வளர்ந்த மணமகளது மலர்க் கூந்தலை நோக்கி, இவள்தன் கூந்தல் நமக்குப் பஞ்ச வடிக்கு ஆம் ' என்ருர். அது கேட்ட கஞ்சாறர் தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியாரும் அதனை வாங்குவார்போல் மறைந்து விசும்பிலே உமையம்மையாருடன் விடைமேல் தோன்றி, நம்பால் உனக்குள்ள பேரன் பினை இச் செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று மானக் கஞ்சாறர்க்கு அருள் செய்து மறைந்தருளினர்.

அங்கு வந்தணைந்த ஏயர்கோன் கலிக்காமஞராகிய மணமகளுர், அவ்வியப்புடைய நிகழ்ச்சியைக் கேள்வியுற்று உளமுவந்தார் ; அத்தெய்வக் காட்சியைத் தாம் காணுமற் போனதற்கு மனந்தளர்ந்தார் ; இறைவர் அருளிய திரு வார்த்தையின் திறங்கேட்டு இடர் நீங்கினர் ; வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளர ப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய நங்கையை உலகெலாம் போற்றத் திருமணம் புணர்ந்து தம்முடைய மூதூர்க்குச் சென்றணைந்தார்.

அரிவாட்டாய காயனர்

சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் பதியில் வேளாண்குடியில் தோன்றியவர் தாயனர் என்னும் இத் நாயனராவர். சிவபெருமான் திருவடிகளில் தொடர்ந்த சிந்தையினராகிய இவர், சிவபெருமானுக்குச் செந் நெல்லும் செங்கீரையும் மாவடுவும் நாள் தோறும் திருவமுது செய்விக்கும் திருப்பணியை மேற்கொண்டொழு கினர். இந்த நன்னிலை இன்னல் வந்தெய்திய காலத்தும் சிந்தை நீங்காச் செயலின் உவந்திடத் திருவுளங்கொண்ட