பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 915

இறைவர், தாயஞரது பெருஞ்செல்வம் குறையுமாறு செய் தருளினர். அவ்வறுமை நிலையிலும் தாயஞர் கூலிக்கு நெல்லறுத்துச் செந்நெலெல்லாம் சிவனுக்குரிய என்று திருவமுது செய்வித்தார். கூலிக்குக் கிடைத்த நெல்லெல் லாம் செந்நெல்லேயாக அமைந்தமையால் அந்நெல்லைத் தம் குடும்பத்துக்குப் பயன்படுத்தாமல், தம் மனைவியார் அடகு கொய்து அமைத்த உணவினையே தாம் உண்டு இத்திருப்பணியைத் தடையின்றிச் செய்துவந்தார்.

தாயனுர், என்றும் போல் ஒருநாள் செந்நெல்லரிசி செங்கீரை மாவடு இவற்றைக் கூடையிற் சுமந்தவராய்த் தம் மனைவியார் இறைவன் திருமஞ்சனத்துக்கேற்ற பஞ்ச கெளவியம் கொண்டு பின்னேவர, முன்சென்ருர். அங்ங்ணம் செல்லும் நாயஞர், கால் இடறிக் கீழே விழப் பின் வந்த மனைவியார் மட்கலத்துடன் வருந்தி வீழ்பவர் கையில்ை அனைத்துப் பிடித்தும் சிவனுக்கு அமுதாகிய செந்நெல் முதலிய அனைத்தும் வயல்வெடிப்பிற் சிதறி வீழ்ந்தன. அந்நிலையில் தாயஞர், இறைவன் திருவமுது செய்தருளும் பேறுபெற்றிலேன் என்று வருந்தித் தம் கையிலுள்ள அரிவாளால் தமது கழுத்தினை அரியத் தொடங்கினர். அந்நிலையில், அவரது கையினைப் பற்றிப் பிடித்து அம்பலத்தாடும் அண்ணலது திருக்கையும், மாவடுவினை அமுது செய்யும் நிலையில் விடேல் விடேல் என்னும் ஓசையும், அவ்வயல் வெடிப்பினின்றும் ஒருசேர எழுந்தன. இறைவனது அருட்பெருங் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்ற தாயஞர், அடியனேன் அறிவி லாமை கண்டும் என் அடிமைவேண்டிப் படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுதுசெய் பரனே போற்றி என்று இறைவனைப் பரவிப் போற்றினர். அந்நிலையிற் சிவபெருமான் இடபவாகனராய்த் தோன்றி, நீபுரிந்த செய்கை நன்று, நின் மனைவியுடன் சிவலோகத்தில் என்றும் வாழ்வாயாக ' என்று அருள்செய்து மறைந் தருளினர்.

இறைவர் அமுது செய்யப் பெற்றிலேன்' என்ற ஏக்கத்தால் தம் கழுத்தினை அரிவாள் பூட்டி அரிதலால் தாயஞராகிய இவர் அரிவாள் தாயர் ' என அழைக்கப் பெற்ருர்.