பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 77

லவர் குறித்துள்ளார். எனவே இச்செய்தி கி. பி. 14-ஆம்

హ్రో - ఫ్రో நூற்ருண்டிலேயே பெருக வழங்கினமை நன்கு பெறப்படும். இச்சிறப்புடைய நிகழ்ச்சி, பெரும்பற்றப்புலியூர் நம்பியும் பரஞ்சோதி முனிவரும் பாடிய திருவிளையாடற் புராணங் களிற் குறிக்கப்பெறவில்லை. எனினும் பின்வந்த சான்ருேள் பலர் இந்நிகழ்ச்சியை வலியுறுத்தியுள்ளமை இவண்நோக்கத் தகுவதாகும்.

" கறைமிடற்றெம் பரற்போற்றி நரிபரியா

வரவழைத்துக் கயற்கண் மூகை இறைவளையைப் பேசுவித்துப் புத்தரை வென்

நம்பலத்தி னினிதிளுடும் பிறை முடித்த பிரானெழுதக் கோவை திரு

வாசகம்பேர் பிறங்குபாடன் மறைவகுத்த வாதவூர் மாணிக்க

வாசகர்தாள் மனத்துள் வைப்பாம் ” என இரசை வடமலேயப்ப பிள்ளை யனவர்களும்,

" நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ

கன நின் துருக்கும் மதுர வாசக கலங்குறு புலனெறி விலங்குறு வீர திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகலே யேனு முனரான், அஃதான்று கைகளோ முறிபடுங் கைகள், காணிற் கண்களோ வொன்று காலையிற் காணும், மாலையி லொன்று வயங்கித் தோன்றும், பழிப்பி ஞென்று விழிப்பி னெரியும் ஆயினுந் தன்னை நீபுகழ்த் துரைத்த பழுதில் செய்யுள் எழுதினன் அதனுல் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி யறிய என் பணிவோனே " எனச் சிவப்பிரகாச சுவாமிகளும்;

"கடையூழி வருந்தனிமை கழிக்கவன்ருே அம்பலத்தில் உடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ? என மனேன் மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும் சிவபெருமான் திருவாசகத்தையும் திருச்சிற்றம்பலக் கோவை யையும் தமது திருக்கரத்தால் எழுதிய அற்புத நிகழ்ச்சியை நினைந்து உளமுருகிப் பாராட்டியுள்ளார்கள்.

இருந்துதி யென் வயிற் கொண்டவன் (300) எனவும்,

தினை வித்துத் தன்னையென் னெஞ்சத்திருந்தம்ப புனேவித்த ஈசன் (140) نه تنها